தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மார்ச் 24 அன்று தில்லியில் மாபெரும் மக்கள் பேரணி

28 Feb 2026, 2:29 pm
தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் மற்றும்  மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக  மார்ச் 24 அன்று தில்லியில் மாபெரும் மக்கள் பேரணி

தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் மற்றும்  மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக  மார்ச் 24 அன்று தில்லியில் மாபெரும் மக்கள் பேரணி

சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு அறிக்கை

புதுதில்லி, பிப். 28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் புதுதில்லியில் உள்ள மத்தியக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட விரிவான அறிக்கை வருமாறு: மக்கள் ஆவேச அணிவகுப்பு மற்றும் மாபெரும் மக்கள் பேரணி தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் (Labour Codes) அறிவிக்கப்பட்டிருப்பதை எதிர்த்தும், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ (VBGRAMG) என்னும் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடத் தீர்மானித்துள்ளது. மேலும், மின்சாரத் திருத்தச் சட்டமுன்வடிவு, விதைச் சட்டமுன்வடிவு மற்றும் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றை எதிர்த்து மார்ச் 24 அன்று புதுதில்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் மக்கள் ஆவேசப் பேரணி நடைபெறுகிறது. இதற்கான தயாரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, வட இந்திய மாநிலங்கள் அனைத்திலும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு மற்றும் மத்தியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் ‘மக்கள் ஆவேச அணிவகுப்பு’ (Jan Akrosh Jathas) பயணங்கள் ஒருங்கிணைக்கப்படும். சட்டமன்றத் தேர்தல்கள் கேரளம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. Kகேரளம்: கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசாங்கத்தை முடக்க பாஜக தலை மையிலான ஒன்றிய அரசு தொடர்ந்து முயன்ற போதிலும், தீவிர வறுமையை ஒழிப்பதில் அந்த அரசு நாட்டிலேயே முதலிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. பொது சுகாதாரம், கல்வி, தொழிலாளர் நலன் மற்றும் பொது விநியோகத் திட்டம் மூலம் அத்தியாவசியப் பொருட்களை உறுதி செய்த அந்த அரசுக்கு மக்கள் மீண்டும் வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மற்றும் பாஜகவின் சீர்குலைப்பு நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டும். Kமேற்கு வங்கம்: திரிணாமுல் காங்கிரஸின் எதேச்சதிகார மற்றும் பெண்கள் விரோத ஆட்சியையும், வகுப்பு வாத பாஜகவையும் தோற்கடிக்க இடது முன்னணிக்கு வாக்களிக்குமாறு அரசியல் தலைமைக்குழு கோரு கிறது. மத அடிப்படையிலான பிளவுகளைத் தூண்டும் சக்திகளிடமிருந்து சமூகத்தைக் காக்க இது அவசியமாகும். K தமிழ்நாடு: தமிழகத்தில் வலுவாக உள்ள திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் மீண்டும் வாக்களிக்க வேண்டும். திருப்பரங்குன்றத்தை மையமாகக் கொண்டு பாஜக - அதிமுக கூட்டணி முன்னெடுக்கும் மதவெறி அரசியலை முறியடிக்கவும், மாநிலத்தின் மதச்சார்பற்ற மரபுகளை வலுப்படுத்தவும் திமுக கூட்டணியை மீண்டும் தேர்ந்தெடுக்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறோம். K அசாம்: அசாமில் வெறித்தனமான வகுப்புவாதப் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் பாஜகவைத் தோற் fடிக்க, மதச்சார்பற்ற வாக்குகள் சிதறாமல் இருப்பதை உறுதி செய்வது பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் பொறுப்பாகும். சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்கள் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்கள் தடையின்றித் தொடர்கின் றன. அசாம் முதலமைச்சர் முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற வீடியோவை பாஜகவின் அதிகாரப்பூர்வ வலைத் தளப் பேருந்துபக்கமே வெளியிட்டிருப்பது அவர்களின் தீவிர வெறுப்பு அரசி யலைக் காட்டுகிறது. தெலுங்கானா, ஹரியானா மற்றும் உத்தரகண்டில் சிறுபான்மையின வியாபாரிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. உத்தரகண்ட் மாநிலம் கோட்வாரில், முஸ்லிம் கடைக்காரர்களைக் காக்கத் தன்னை ‘முகமது தீபக்’  என்று அடையாளப்படுத்திக் கொண்டு ஆர்எஸ்எஸ் கும்பலை எதிர்த்த இளம் இந்து உடற்பயிற்சி கூட உரி மையாளர் தீபக் குமாரின் துணிச்சலை அரசியல் தலைமைக்குழு பாராட்டுகிறது. மேலும், பாஜக ஆளும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் ‘மனுவாதி’ சக்திகளால் தலித்துகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கின்றன. இளம் தம்பதியினர் திருமணத்திற்குப் பெற்றோரின் அனுமதியைக் கட்டாயமாக்கும் குஜராத் அரசின் முடிவு பெண்களின் உரிமைகள் மீதான தாக்குதலாகும். அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தம் பாஜக அரசு அமெரிக்காவிடம் சரணடைந்து, நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 15 சதவீத வரிகளை விதித்துள்ள சூழலில், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளே வர்த்தக ஒப்பந்தங்க ளை நிறுத்தியுள்ளன. ஆனால், இந்திய அரசு அமெரிக்க அழுத்தத்திற்குப் பணிந்து ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, விவசாயிகளின் நலன்களைப் பலி கொடுத்துள்ளது. இது இந்தியாவின் முதன்மை முக்கியத்துவம் வாய்ந்த நலன்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2026-27 பட்ஜெட், கார்ப்பரேட்டுகள் மற்றும் பணக்காரர்களின் நலன்களுக்காக உழைக்கும் மக்க ளின் நலன்களைக் காவு கொடுக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுகிறது; வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டு, எட்டு மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்ப்புக் குரல்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் பிப்ரவரி 12 பொது வேலைநிறுத்தம் மற்றும் விவசாயிகளின் போராட்டங்கள் அரசின் மீதான மக்க ளின் கோபத்தை வெளிப்படுத்துகின்றன. மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பெரும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது; இதனை உச்சநீதிமன்றம் தலையிட்டு கண்காணிப்பது, அந்தச் செயல்முறையில் உள்ள குளறுபடிகளை உறுதிப்படுத்துகிறது. அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு கண்டனம் கியூபா மீதான பொருளாதாரத் தடையைத் தீவிரப்படுத்தும் அமெரிக்காவின் ஏகாதிபத்தியச் செயலை சிபிஐ(எம்) வன்மையாகக் கண்டிக்கிறது. கியூபாவிற்கு அத்தியாவசிய மருந்துகளை அனுப்ப இந்திய அரசை வலியுறுத்துகிறோம். மேலும், ஈரானைக் குறிவைத்து மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கைகள் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாகும். பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் காசாவில் போர் நடந்து வரும் சூழலில், பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் இந்தியாவின் நீண்ட காலப் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து விலகிச் செல்வதைக் காட்டுகிறது. இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலன்களோடு இந்திய வெளியுறவுக் கொள்கையை இணைக்கும் ஒரு பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தவறாகும். அறைகூவல் மக்கள் விரோதக் கொள்கைகளை முறியடிக்க மார்ச் 24 தில்லி பேரணியில் பெருந்திரளாகப் பங்கேற்க அரசியல் தலைமைக்குழு அழைப்பு விடுக்கிறது.  சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்களில், இந்தப் போராட்டங்களை மேலும் வலுப் படுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரிகளுக்கும் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களிக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மக்களைப் பேரன்புடன் கேட்டுக் கொள்கிறது. தமிழில்: ச.வீரமணி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.