கணக்கம்பாளையம் ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைக்க கோரி பெருந்திரள் கவன ஈர்ப்பு போராட்டம்
23 Jan 2026, 5:49 pm
<p><strong>கணக்கம்பாளையம் ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைக்க கோரி பெருந்திரள் கவன ஈர்ப்பு போராட்டம்</strong></p>
<p>உடுமலை, ஜன.23 - உடுமலை நகராட்சி விரிவாக்கத் தில் கணக்கம்பாளையம் ஊராட்சியை இணைக்கக் கோரி வெள்ளியன்று கணக்கம்பாளையம் ஒருங்கிணைப்பு குழு மற்றும் அனைத்து கட்சிகளின் சார் பில் உடுமலை நகராட்சி அலுவல கத்தின் முன்பு கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், கணக்கம்பா ளையம் ஊராட்சியில் பெரும் பகுதி நகராட்சியாகவும், மீதமுள்ள பகுதி ஊராட்சியாகவும் உள்ளன. இந்த கிராம ஊராட்சியில் 5.74 சதுர கிலோமீட்டர் பரப் பளவில், 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்க ளுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்ப தில்லை. இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீதிகளும், புதிதாக 60க்கும் மேற்பட்ட வீட்டுமனைகளில் புதிய வீடு கள் கட்டப்பட்டு, முழுமையான நகர மாக மாறி உள்ளது. இதனால் நிர்வாக வசதிக்காகவும், பொது மக்களின் அடிப்படை தேவை யான குடிநீர், சுகாதாரம் முழுமையாக வழங்கும் வகையில் கணக்கம்பாளை யம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என உடுமலைப் பேட்டை நகரமன்ற கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டு அதற்கான கருத்துரு அனுப்பப்பட்டது. மேலும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர், நகராட்சி நிர்வாக ஆணையர் ஆகியோர் பரிந் துரை செய்துள்ளனர். இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, உடனடி யாக ஊராட்சியை இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வலியு றுத்தினர். முன்னதாக, இப்போராட்டத்திற்கு ஒருக்கிணைப்புக் குழு தலைவர் பாப்பு சாமி தலைமை வகித்தார். செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ஜெயபிர காஷ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி, திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, தவெக மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் உட்பட பொது மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
