தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கான்கிரீட் சாலை அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் மீண்டும் மனு!

27 Nov 2025, 3:11 pm
கான்கிரீட் சாலை அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் மீண்டும் மனு!
<p>நாமக்கல், நவ.27- வெள்ளக்கல்பட்டி, அம்பேத்கார் நகர் பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நாம கிரிப்பேட்டை செயல் அலுவலரிடம் வியா ழனன்று மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1 இல், அம்பேத்கர் நகர் பகுதியில், சுதந்திரம் பெற்ற நாள் முதல் இன்று வரை கான்கிரீட் சாலை அமைக்கப்படாமல் உள் ளது. இதனால், சாலையில் தொடர்ந்து சேறும் சகதியுமாக காணப்படுவதுடன், சாக் கடை நீரும் வழிந்து ஓடுகிறது. மேலும், மழை காலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால், அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் ஏற்படும் அபா யம் உள்ளது. இதனால், பொதுமக்கள் பெரி தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பிரச்சினை தொடர்பாக பலமுறை போராட்டங்கள் நடத்தியும், புகார் அளித்தும் &nbsp;இதுவரை கான்கிரீட் சாலை அமைக்கப்பட வில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் தொடர்ந்து அதிகாரிகளை சந்தித்து கான்கிரீட் சாலை அமைக்க வலியுறுத்தி வருகின்றனர். அரசு அதிகாரிகள் நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளிப்பது போன்ற செயல்பாடுகள் இருந்தாலும், சாலை அமைக் கப்படாத நிலை தொடர்கதையாகி வருகி றது. இதனிடையே, எதிர்வரும் நிதியாண்டில் அரசுக்கு மனு அனுப்பி, அரசிடமிருந்து நிதி &nbsp;ஒதுக்கீடு பெற்று, பொதுமக்களின் ஒத்து ழைப்புடன் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் எழுத்துப் பூர்வமாக கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், தற்போது வரை அப்பணிகள் துவங் காமல் நீடிக்கின்றன. எனவே, அம்பேத்கர் நகர் மக்களை அபாயகரமான நோய்களிலிருந்து பாது காக்க வேண்டியும், நாமகிரிப்பேட்டை, வெள் ளக்கல்பட்டி, அம்பேத்கர் நகர் பகுதிக்கு உடனடியாக கான்கிரீட் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் &nbsp;பேரூராட்சி செயல் அலுவலரிடம் மீண்டும் ஒரு நினைவூட்டல் கோரிக்கை மனு வழங் கப்பட்டது. இந்த மனு கொடுக்கும் இயக்கத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் &nbsp;செயலாளர் வி.பி.சபாபதி தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.டி. கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் பி. செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.