பாஜகவினர் கொடுத்த பொய் வழக்கில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சியினர் விடுதலை
27 Feb 2026, 5:32 pm
<p><strong>பாஜகவினர் கொடுத்த பொய் வழக்கில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சியினர் விடுதலை</strong></p>
<p>திருப்பூர், பிப்.27- இடுவாய் கிராமத்தில் பாஜக-வினர் கொடுத்த எஸ்சி, எஸ்டி, வன்கொடுமை பொய் வழக்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட சிறப்பு நீதிமன்றத் தில் விடுதலை செய்யப்பட்ட னர். திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கணேசன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பதவி ஏற்றார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் இடுவாய் பகு தியை சேர்ந்த ஏழை மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அவர்களுக்கு அந்த பட்டாவுக்கு உரிய நிலம் அளந்து கொடுக் கப்படவில்லை. எனவே அந்த மக்கள் அப் போதைய கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜனிடமும், இடு வாய் ஊராட்சி மன்ற தலைவர் கணேசனிட மும் கோரிக்கை மனு கொடுத்து முறையிட்ட னர். இதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்து அந்த மக்க ளுக்கு உரிய பட்டா நிலம் பெற்றுத்தர கணே சன் தொடர் முயற்சி மேற்கொண்டார். இதை யடுத்து இடுவாய் ஊராட்சியில் ஆதிதிராவி டர் நலத் துறையில் வழங்கப்பட்ட நிலத்தை உள்ளூர் முக்கிய பிரமுகர் ஒருவர் ஆக்கிர மிப்பு செய்து வைத்திருந்ததை கண்டறிந்து மீட்டனர். அந்த நிலத்தில் 85 சென்ட் இடத்தில், மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று ஏற்க னவே பட்டா பெற்றிருந்த 30 பேருக்கு இடம் அளந்து தரப்பட்டது. இந்த நிலையில் இடு வாய் ஊராட்சி பாஜக பிரமுகர் செல்வகுமார் தலைமையில் சிலர் பட்டா நிலம் பெற்றவர் களிடம் தகராறு செய்துள்ளனர். ஊராட்சி சார் பில் முயற்சி செய்து பட்டியலின மக்களுக்கு பட்டா பெற்றுக் கொடுத்த நிலையில், இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் உண்மை நிலையை தெரிவித்த போதும், பாஜகவினர் வேண்டுமென்றே தகராறில் ஈடுபட்டனர். அத்துடன் இடுவாய் ஊராட்சி மன்ற தலை வர் கணேசன் உள்ளிட்ட நால்வர் மீது, தாக்கு தல் நடத்தியதாக எஸ்.சி, எஸ்.டி, தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி பொய் புகார் கொடுத்தனர். மங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மாவட்ட எஸ்,சி, எஸ்,டி வன்கொடுமை வழக்கு சிறப்பு நீதிமன் றத்தில் நடைபெற்று வந்தது. மார்க்சிஸ்ட் கட்சி சார்ந்த வழக்கறிஞர்கள் கலந்தாலோச னையுடன், இடுவாய் ஊராட்சி மன்ற அப்போ தைய தலைவர், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர், திருப்பூர் தெற்கு ஒன்றியச் செய லாளர் கே.கணேசன், அவரது மகன் வாலிபர் சங்கத்தை சேர்ந்த க.சிந்தன், சிபிஎம் கிளைச் செயலாளர் கே.ஈஸ்வரன், அவரது மகன் ஈ.ராஜேஷ் ஆகியோர் வழக்கு விசாரணை யில் பங்கேற்று வந்தனர். இந்த வழக்கில் எஸ்சி எஸ்டி வன்கொ டுமை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் வெள்ளியன்று தீர்ப்பளித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர்.</p>
