முந்தய பக்கம்

மார்க்சியக் கோட்பாட்டாளர் எம்.பி. பரமேஸ்வரன் மறைவு

yesterday
மார்க்சியக் கோட்பாட்டாளர் எம்.பி. பரமேஸ்வரன் மறைவு

மார்க்சியக் கோட்பாட்டாளர் எம்.பி. பரமேஸ்வரன் மறைவு

திருச்சூர், ஆக. 13-மக்கள் அறிவியல் இயக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த மார்க்சியக் கோட்பாட்டாளரும், அணு விஞ்ஞானியுமான டாக்டர் எம்.பி.பரமேஸ்வரன் (92) கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

1935ஆம் ஆண்டு ஜனவரி 18 அன்று கீரலூர் கிராமத்தில் பிறந்த பரமேஸ்வரன், திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் மின் பொறியியல் படிப்பை முடித்தார். பின்னர் ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ பவர் இன்ஸ்டிடியூட்டில் அணுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1957 முதல் 1975 வரை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) விஞ்ஞானியாகப் பணியாற்றினார். கம்யூனிஸ்ட் கட்சியுடனான தனது தொடர்பைத் தொடர்ந்து அவர் அந்தப் பதவியிலிருந்து விலகினார்.

மேலும், கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் (Kerala Sastra Sahitya Parishad) மற்றும் அறிவியல் தொடர்பாளர்களின் தேசிய அமைப்பான அகில இந்திய மக்கள் அறிவியல் வலையமைப்பு (All India People’s Science Network) ஆகியவற்றின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராக பரமேஸ்வரன் இருந்தார். குறிப்பாக, தேசிய அளவில் எழுத்தறிவு இயக்கத்தை விரிவுபடுத்துவதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார்.

மறைந்த திரைப்பட இயக்குநர் ஷாஜி இயக்கிய, ஏ.கே.கோபாலனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படத்தில், ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் கதாபாத்திரத்தையும் பரமேஸ்வரன் ஏற்று திறம்பட நடித்திருந்தார். எம்.பி.பரமேஸ்வரனின் மறைவு அறிவியல் இயக்கத்திற்கு மட்டுமன்றி இந்தியா முழுமையும் உள்ள தொழிலாளி வர்க்கத்திற்கு பேரிழப்பாகும்.

Share
FacebookXWhatsAppTelegram