வாழும் காலத்திலேயே கொண்டாடப்பட்ட மக்கள் தலைவர்
7 Jun 2026, 10:25 pm

வாழும் காலத்திலேயே கொண்டாடப்பட்ட மக்கள் தலைவர்

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழக மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் எஸ்.ஏ. பெருமாள் (எஸ்.ஏ.பி) குறித்து, அவருடன் களப்பணியாற்றிய 143 தோழர்களின் நேர்காணல்கள் மற்றும் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு, தோழர் எம்.ஜே. பிரபாகர் தொகுத்துள்ள 528 பக்கங்கள் கொண்ட அரிய வரலாற்றுப் பேழையே “மார்க்சிய ஆசான் தோழர் எஸ்ஏபி” எனும் நூலாகும்.

தோழர் எஸ்.ஏ.பி.யின் மாணவப் பருவ கம்யூனிஸ்ட் தொடர்பு, 1964-இல் கட்சி உருவான போது மதுரை-முகவை மாவட்டங்களில் அவர் ஆற்றிய பணிகள், தொழிற்சங்கப் பொறுப்புகள், மற்றும் மாணவர், வாலி பர், முற்போக்கு எழுத்தாளர் அரங்கிற்கு அவர் வழங்கிய தத்துவார்த்த வழிகாட்டு தல்கள் என அனைத்தையும் தோழர் களின் நினைவுப் பதிவுகளோடு அரிய புகைப்படங்களுடன் இந்நூல் தாங்கி வந்துள்ளது.

1979-இல் சிஐடியு மாநில மையத்தில் நான் பொறுப்பேற்ற பிறகு, ராஜபாளை யம் மற்றும் இராமேஸ்வரம் மாநிலக்குழு கூட்டங்களின் போதே தோழர் எஸ்.ஏ.பி. யுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அவரின் அசாத்திய செயல்வேகம், தனித்துவமான பேச்சுப் பாணி, அவர் நடத்திய அரசியல் வகுப்பு களின் ஒலிநாடாக்கள், கட்டுரைகள் ஆகியவை அவரின் ஆளுமையை எனக்கு உணர்த்தின.

1960-களுக்குப் பிந்தைய தமிழகத்தின் அரசியல், சமூகப் பிரச்சனைகளில் அவரின் நேரடித் தலையீடுகள் எத்தகையவை என்பதை இந்நூல் இன்னும் ஆழமாகப் புரிய வைக்கிறது. நூலாசிரியர் பிரபாகர் குறிப்பிட்டது போல, மக்கள் தலைவர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே ஆவணப்படு த்திக் கொண்டாடி மகிழ்வதற்குக் கிடைத்துள்ள மிகச்சிறந்த வாய்ப்பு இது.

உழைக்கும் வர்க்கக் களத்தில் நிற்கும் ஒவ்வொரு தோழரும் அவசியம் வாசிக்க வேண்டிய தத்துவார்த்த வழிகாட்டியான இந்நூலின் அடுத்த பதிப்பில், எழுத்துப்பிழைகளைக் களைந்து, விடுபட்ட மூத்த தோழர்களின் குறிப்பு களையும் இணைக்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு, இந்த வரலாற்றுப் பணியைச் செம்மையாகச் செய்துள்ள தொகுப்பாளருக்கும், ரெட் ஸ்டார் பப்ளி கேஷன்ஸ் மற்றும் பாரதி புத்தகால யத்திற்கும் என் மனமார்ந்தவாழ்த்துகள்.

மார்க்சிய ஆசான் தோழர் எஸ்.ஏ.பி தொகுப்பாசிரியர்: எம்.ஜே. பிரபாகர் வெளியீடு: ரெட் ஸ்டார் பப்ளிகேஷன்ஸ் விற்பனை: பாரதி புத்தகாலயம் பக்கங்கள்: 528 விலை: ₹600 தொடர்புக்கு: 80722 01734, 9444567935