முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் படிப்பு வட்ட சிறப்பு அமர்வு; தீக்கதிர் சந்தா அளிப்பு

1 Oct 2026, 10:51 pm
மார்க்சிஸ்ட் படிப்பு வட்ட  சிறப்பு அமர்வு; தீக்கதிர் சந்தா அளிப்பு
<p><strong>மார்க்சிஸ்ட் படிப்பு வட்ட சிறப்பு அமர்வு; தீக்கதிர் சந்தா அளிப்பு</strong></p><p>சிவகாசி, அக்.1–மார்க்சிஸ்ட் படிப்பு வட்டத்தின் 61ஆவது சிறப்பு அமர்வு சிவகாசியில் புதனன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகர் குழு உறுப்பினர், ஆசிரியர் இரா. முத்துராஜ் தலைமை வகித்தார்.இந்நிகழ்வில் ‘தீக்கதிர்’ ஆசிரியரும், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான எஸ்.பி. ராஜேந்திரன் கலந்து கொண்டு “சோசலிசமும் சந்திக்கும் சவால்களும்” என்ற தலைப்பில்உரையாற்றினார். மேலும், தீக்கதிர் நாளிதழின் 20 பிரதிகளுக்கான ஆண்டுச் சந்தாத் தொகை சிவகாசி மாநகர் குழு சார்பாக வழங் கப்பட்டது.</p><p>இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என். தேவா, சிவகாசி மாநகர் செயலாளர் இரா. சுரேஷ்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் பி. பாலசுப்ரமணியன், மாநகர் குழு உறுப்பினர்கள், செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள், வாசகர்கள் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram