மார்க்சிஸ்ட் கட்சி போராட்ட எதிரொலி: சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி துவக்கம்
14 Nov 2025, 1:26 pm

மார்க்சிஸ்ட் கட்சி போராட்ட எதிரொலி: சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி துவக்கம்

உடுமலை, நவ.14- பள்ளபாளையம் ஊராட் சியில் சாக்கடை கால்வாய் சரி செய்யக்கோரி மார்க் சிஸ்ட் கட்சி போராட்ட அறி விப்பை அடுத்து வெள்ளி யன்று தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. உடுமலை ஒன்றியம் பள் ளபாளையம் ஊராட்சியில் சாக்கடை கால்வாய் கட்டு மானப் பணிகள் பாதியில் நிறுத் தப்பட்டதால் மழைநீரும், கழி வுநீரும், பட்டியலின மக்களின் குடியிருப்பு பகுதியில் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பர வும் நிலையில் ஏற்பட்டிருந்தது. இதை சரி செய்யக்கோரி பள்ள பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வியாழனன்று முற் றுகையிடப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறி வித்திருந்தது. உடனடியாக பணிகளை துவங்கப்படும் என அலுவலர்கள் உறுதி அளித்ததையடுத்து, போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி வெள்ளியன்று சாக்கடை கால்வா யில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டது. மேலும், தற்காலிக மாக கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைய டுத்து போராட்ட அறிவிப்பை அடுத்துதான் தற்போது தீர்வு கிடைத்துள்ளது. இனி வரும் மாதங்களில் மழை அதிகமாக இருக்கும் என்பதால், நீர் செல்லும் ஓடைகளை தூர்வார ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற னர்.