தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குப்பையால் சுகாதார சீர்கேடு: மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை மனு

22 Dec 2025, 4:02 am
குப்பையால் சுகாதார சீர்கேடு:  மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை மனு

திருப்பூர், டிச.22 – திருப்பூர் மாநகர் கருவம்பாளையம் பகு தியில் கொட்டப்பட்ட குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் உரிய நடவக்கை எடுக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கருவம்பாளையம் பகுதி  கிளைகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள் ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று மக்கள் குறைதீர் கூட்டம்  நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கருவம்பாளையம் கட்சி கிளைச் செயலாளர்கள் ஜி.சுரேஷ்குமார், பி. கோபால் ஆகியோர் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சி கரு வம்பாளைம், சூர்யா நகர், ஏபிடி ரோடு இணைப்பு பாலங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பையால் இப்பகுதியில் வசிக்கும் மக்க ளுக்கும், அவ்வழியை பயன்படுத்தி வருப வர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும், இந்தக் குப்பையை தீ வைத்து எரிப் பதால் மூச்சுத் திணறல், சுவாசப் பிரச்சனை கள் ஏற்படுகிறது. நிலத்தடி நீரும் பாதிக்கப்படு கிறது. தெரு விளக்குகளும் எரிவதில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கூறப்பட்டுள்ளது. இதில் கட்சியின் தெற்கு மாநகரக்குழு உறுப்பினர் ஞானசே கர் உள்ளிட்ட திரளான பொதுமக்களும் உட னிருந்தனர்.

தனியார் பொருட்காட்சி கண்காணிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் ஐந்து லட்சத்திற் கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பனியன்  நிறுவனங்களில் வேலை செய்து வருகின்ற னர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் விடுமுறையில், குடும்பத்துடன் வெளி யில் சென்று பொழுதை கழிக்கலாம் என்றால்,  மாநகராட்சி பூங்கா மற்றும் சினிமா தியேட்டர் கள் மட்டுமே உள்ளன. தற்போது அரை யாண்டு மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருப் பூரில் காங்கேயம் ரோடு மற்றும் பல்லடம் ரோட்டில் தனியாரால் பொருட்காட்சி நடத் தப்பட்டு வருகிறது.  பொழுதுபோக்கு அம்சங்கள் பெரிய  அளவில் இல்லாத நிலையை பயன்படுத்தி, நுழைவு கட்டணமாக ரூ.60 முதல் ரூ.100 வரை  மக்களிடம் அநியாய கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதோடு பார்க்கிங் கட்ட ணமாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.20 ம்.  நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.50 ம் வசூ லித்து வருகிறார்கள். மேலும், பொருட்காட் சியை கண்டுகளிக்க வரும் பொதுமக்க ளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலை  இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக் கின்றனர். ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ச்சி யாக நடைபெறும் பொருட்காட்சிக்கு, அரசின்  உரிய வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகி றதா? என சந்தேகம் உள்ளது. இன்னும் ஓரிரு  நாளில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடு முறை மற்றும் பண்டிகை தொடர் விடுமுறை  வர உள்ள நிலையில், பொருட்காட்சியை காண மக்கள் கூட்டம் அதிக அளவில் வரும் எனவே, பொதுமக்களின் நலன் கருதி பாது காப்பு, சுகாதாரம், தீத்தடுப்பு, மின்சார பாது காப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் பொருட் காட்சி நடத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என நல்லூர் நுகர்வோர் நல  மன்றம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தொழிலாளர்களுக்கு போனஸ், பிஎப்

தமிழ்நாடு ஜனநாயக பனியன் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில்  அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது,  கணக்கம்பாளையம் பிரிவு பகுதியில் செயல் பட்ட என்.எஸ்.பி டெக்ஸ் என்ற பனியன் நிறுவ னத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பனியன் பணி யாளர்கள் பல ஆண்டுகளாக பணி செய்து வந் தனர். கடந்த நவம்பர் மாதம் முதல் வேலை  இல்லை எனக்கூறி அவர்களை வெளியேற்றி  விட்டனர், வருங்கால வைப்பு நிதியில் (பிஎப்)  தொழிலாளர்களின் பங்களிப்பு மற்றும் நிறு வனத்தின் பங்களிப்பு எதுவும் செலுத்தப்பட வில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் லீவ்  கேசுவல் வழங்கப்படவில்லை. எனவே தொழிலாளர் துறை மூலமாக நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய  பிஎப் மற்றும் போனஸ் பெற்று தருமாறு கூறப் பட்டுள்ளது. நாவிதன் புதூர் பகுதி மக்கள் அளித்த  மனுவில் கூறியிருப்பதாவது, தாராபுரம் வட் டம், நந்தவனம்பாளையம் பஞ்சாயத்து காசி லிங்கம்பாளைம் கிராமம், நாவிதன் புதூரில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த மக்கள் 50  குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நி லையில், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு  10 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர், வட்டாட் சியர் என தெடர்ச்சியாக மனு கொடுத்து வருவ தாகவும், இன்று வரை இப்பகுதி மக்களுக்கு  வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் உள் ளது. இதனால், ஒரே வீட்டில் கூட்டுக்குடும்ப மாக பெரும் சிரமத்தில் வசித்து வருவதா கவும், காசிலிங்கம்பாளைம் கிராமம் நாவி தன் புதூரில் நத்தம் புல எண்ணில் 995/22  புறம்போக்கு நிலம் உள்ளதால் அதில் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.