முன்னாள் ராணுவத்தினருக்கு பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி இயக்கம்
27 Jan 2026, 3:28 pm
<p><strong>முன்னாள் ராணுவத்தினருக்கு பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி இயக்கம்</strong></p>
<p>சென்னை, ஜன. 27 - முன்னாள் ராணுவத்தினர் குடியிருக்கும் பகுதிக்கு பட்டா கேட்டு திங்களன்று (ஜன.27) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. தாம்பரம் ராஜகீழ்பாக்கம் கிராமம், பரா சக்தி நகரில் (சர்வே எண் 46/1 ஏ1) 85 முன்னாள் ராணுவத்தினர் குடும்பங்கள் உள்ளன. 40 ஆண்டுகளாக வசித்து வரும் இந்த குடும் பங்களுக்கு கிரையப் பத்திரம் பதிவு செய்யப் பட்டு, எம்எம்டிஏ மூலம் அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது. பொதுப்பணித்துறை இந்த இடத்தை ஆய்வு செய்து, எல்லை கற்கள் நட்டு பட்டா வழங்கலாம் என்று அன்றைய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கையும் அனுப்பியுள்ளார். சர் எண்: 46/1ஏ-1ன் இருபுறமும் (தெற்கு,வடக்கு) ஏற்கெனவே மனைபிரிவினை செய்து பட்டா வழங்கப்பட்டுள்ளது. மழை வெள்ளக் காலத்தில் கூட நீர் தேங்காத குடியிருப்பு பகுதியை நீர்நிலை என்று பட்டா மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுத்துறை பரிந்துரை யின் படி முன்னாள் ராணுவ வீரர் குடி யிருப்புகளுக்கு குடிமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி சிபிஎம் தாம்பரம் பகுதிக்குழு சார்பில் தாம்பரம் வட்டாட்சியர் அலு வலகத்தில் மனு அளிக்கும் இயக்கம் நடை பெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.பாக்கி யம், தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, பகுதிக்குழு உறுப்பினர் தமீம்பாஷா, கிளைச் செயலாளர் மகேஷ், பராசக்தி நகர் பட்டாக்குழு ஒருங்கிணைப் பாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
