தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் பெருந்திரள் முறையீடு

13 Feb 2026, 5:58 pm
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் பெருந்திரள் முறையீடு
<p><strong>அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் பெருந்திரள் முறையீடு</strong></p> <p>கோவை, பிப். 13- இடிகரை பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி யினர் வெள்ளியன்று பெருந்திரள் முறை யீட்டில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், இடிகரை பேரூராட்சி செயல் அலுவலரிடம் அளித்த மனுவில், இதில், 1ஆவது வார்டுக்குட்பட்ட சித்திக் நகர் &nbsp;பாலம் அமைத்து தெருவிளக்கு மற்றும் தார் சாலைகள் அமைக்க வேண்டும். ஜிகேடி பள் ளிக்கு செல்லும் சாலையை சீரமைத்து முற்பு தர்களை அகற்ற வேண்டும். விடுபட்ட இடங் கள் மற்றும் ஸ்ரீராம் நகர் ஸ்டார் டிரீம் சிட்டி &nbsp;மற்றும் ராமச்சந்திரா நகர், பாரதி கார்டன் நகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் தார் சாலைகள் அமைக்க வேண்டும். இடிகரை பேரூராட்சிக்குட்பட்ட தண்ணீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவ தால் தண்ணீர் விரயமாகி வருகிறது. இதனால் மக்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படு கிறது. முறையாக பராமரித்து குடிநீர் விநியோ கத்தை முறைப்படுத்த வேண்டும். இடிகரை பேரூராட்சியில் உள்ள குப்பை கிடங்கை முறையாக பராமரிக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். மேற்கண்ட கோரிக்கைகளை மக்கள் மத்தி யில் கொண்டு சென்று, நூற்றுக்கணக்கான மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை நடத் தியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்த மனு அளிக்கும் இயக் கத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.கோபால், எஸ்.எஸ்.குளம் மேற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் கே.பி.குணசேகரன், இடிகரை கிளைச் செய லாளர் கே.சௌந்தர்ராஜன், இடிகரை பேரூ ராட்சி 13 ஆவது வார்டு சிபிஎம் உறுப்பினர் கே. கற்பகம் குப்புராஜ் உள்ளிட்டோர் தலைமை யில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.