தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்கா இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி கோபாவேச ஆர்ப்பாட்டம்

3 Mar 2026, 3:38 pm
அமெரிக்கா இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி கோபாவேச ஆர்ப்பாட்டம்
<p><strong>அமெரிக்கா இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சி கோபாவேச ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திருப்பூர், மார்ச் 3 - ஈரான் மீது காட்டுமிராண்டித்த னமான யுத்தம் தொடுத்துள்ள அமெ ரிக்க ஏகாதிபத்தியம், அதன் அடியா ளாக செயல்படும் இஸ்ரேல் யுத்த வெறி ஆட்சியாளர்களைக் கண்டித்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் &nbsp;கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட் டம் நடத்தியது. திருப்பூர் காங்கேயம் கிராஸ் &nbsp;சிடிசி கார்னரில் செவ்வாயன்று &nbsp;மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஜெயபால் தலைமை &nbsp;ஏற்றார். இதில் இறையாண்மை மிக்க &nbsp;ஈரான் மீது யுத்தம் தொடுத்து படு கொலை நிகழ்த்தும் அமெரிக்க ஏகா திபத்தியம், இஸ்ரேல் யுத்தவெறி &nbsp;ஆட்சியாளர்களை கண்டித்தும், போரை நிறுத்த வலியுறுத்தியும், அமெரிக்கா, இஸ்ரேலை கண்டிக் காத இந்திய பிரதமர் மோடி கண்ட னம் தெரிவிக்க வலியுறுத்தியும் முழக் கங்கள் எழுப்பப்பட்டன. இதில் எண்ணெய் வளத்தை &nbsp;கைப்பற்றும் அமெரிக்கா இஸ்ரேல் &nbsp;அரசுகளின் யுத்த நோக்கத்தையும், இந்த போரில் அப்பாவி மக்கள் படு கொலை செய்யப்படுவதையும், யுத் தத்தினால் ஏற்படும் பேரழிவுகளை யும் கண்டித்தும் இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மணி கண்டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோர் உரை யாற்றினர். இதில் கட்சியின் மாவட்டச் &nbsp;செயலாளர் சி.மூர்த்தி உள்பட திருப் பூரின் பல்வேறு பகுதிகளில் &nbsp;இருந்தும் மார்க்சிஸ்ட் கட்சியினர் பெருந்திரளானோர் கலந்து கொண்டு கண்டனம் முழங்கினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.