முந்தய பக்கம்

பழுதடைந்துள்ள மின்மாற்றியை மாற்ற மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

2 Dec 2025, 4:11 pm
பழுதடைந்துள்ள மின்மாற்றியை மாற்ற  மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை
<p><strong>பழுதடைந்துள்ள மின்மாற்றியை மாற்ற மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை</strong></p> <p>திருவண்ணாமலை, டிச. 2- திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் பேரூராட்சி நடுவன் நகரில் அமைந்துள்ள பழைய மின்மாற்றி மிகவும் பழுதடைந்து ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. சாலையோரம் அமைந்துள்ள இந்த மின்மாற்றியால் விவசாயிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, பழைய மின்மாற்றியை மாற்றி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெரணமல்லூர் மின்வாரிய அலுவலக உதவிப் பொறியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் கே. பெருமாள், ஒன்றியச் செயலாளர் பி.கே. முருகன் ஆகியோர் வழங்கிய இந்தக் கோரிக்கை மனு மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக மின்வாரிய அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram