முந்தய பக்கம்

ஊத்துக்குளி தெற்கு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி பிரச்சாரம்

27 Dec 2025, 6:08 pm
ஊத்துக்குளி தெற்கு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி பிரச்சாரம்
<p><strong>ஊத்துக்குளி தெற்கு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி பிரச்சாரம்</strong></p> <p>திருப்பூர், டிச. 27 - அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டைகளை இணைக்கக் கோரியும், திட்டப்படியான குட்டைகளுக்கு நீர் நிரப்பக் கோரி யும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் பிரச்சார இயக்கம் சனியன்று ஊத் துக்குளி இரயிலடி பேருந்து நிறுத்தத் தில் துவங்கியது. இந்த பிரச்சார இயக்கத்தை மாவட்ட &nbsp;செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் துவக்கி வைத்து உரையாற்றினார். தாலுகா குழு உறுப்பினர் ஆர்.மணியன் &nbsp;தலைமையில் நடைபெறும் இந்த பிரச் சார இயக்கத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க தாலுகா செயலாளர் எஸ்.கே. கொளந்தசாமி, கட்சியின் தாலுகா &nbsp;குழு உறுப்பினர்கள் லெனின், சசிகு மார், சக்திவேல் மற்றும் பழனிசாமி, ராம சாமி, நடராஜ், பெரியசாமி, ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊத்துக்குளி ஒன்றியத்தின் தெற்கு பகுதி கிராமங்களில் பிரச்சாரம் செய் யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram