தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜகவுக்கு பாடம் புகட்ட சிபிஎம் வேட்பாளருக்கு வாக்களிப்பீர்

12 Apr 2026, 5:30 am
தமிழ்நாட்டை  வஞ்சிக்கும் பாஜகவுக்கு  பாடம் புகட்ட சிபிஎம்  வேட்பாளருக்கு  வாக்களிப்பீர்

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜகவுக்கு பாடம் புகட்ட சிபிஎம் வேட்பாளருக்கு வாக்களிப்பீர்

சென்னை, ஏப். 11- சமூக நல திட்டங்கள் தொடர சிபிஎம் வேட்பாளர் எல்.சுந்தரரா ஜூக்கு வாக்களிப்பீர் என்று எண்ணூ ரில் நடைபெற்ற கூட்டத்தில் சு.வெங்க டேசன் வேண்டுகோள் விடுத்தார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் எல்.சுந்தரராஜை ஆதரித்து மாநில செயற்குழு உறுப்பினர், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எண்ணூ ரில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், உள்ளன்போடு, நேசிப்போடு, ஏழை எளிய, அடித்தட்டு மக்களுக்கு, மீனவ சமூக மக்களுக்கு, விளிம்பு நிலை மக்களுக்கு, அனைத்துச் சமூகத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களுக்கு ஏதாவது ஒன்றை நான் செய்துவிட மாட்டேனா என்று துடிக்கிற இதயம் இருந்தால் மட்டும் தான் மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு, தாயுமானவர் திட்டம் என பல்வேறு திட்டங்களை அமல்படுத்த முடியும். ஆனால் பாஜக தமிழ்நாட்டின் உரி மையை பறித்தார்கள். ஒரே ஒரு புதிய ரயில்வே திட்டம் கூட கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு வழங்கவில்லை. ஆனால் உத்தரப் பிரதேசத்துக்கும், பீகாருக்கும், மகா ராஷ்டிராவுக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். வராத மெட்ரோ இங்கே விம்கோ நகரோடு மெட்ரோ முடிந்துவிட்டது. எண்ணூர் வரை மெட்ரோ வந்திருக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட திட்டம். ஆனால் எதற்கும் ஒன்றிய அரசு நமக்கு நிதி கொடுக்க மறுக்கி றது. வஞ்சகம், வஞ்சகம், வஞ்சகம். அவ்வளவு வஞ்சகத்தை நிகழ்த்தி னாலும் ஒரு போதும் தமிழ்நாட்டைத் தளரவிடமாட்டோம் என்று உயர்த்திப் பிடிக்கிற அரசாக திமுக அரசு உள்ளது. களத்தில் நிற்கும் எம்பிக்கள் தமிழ்நாட்டை, தமிழ் மொழியை, தமிழ் பண்பாட்டை வஞ்சிக்கின்ற மோடி அரசோடு ஒரு துளியும் சமர சம் செய்ய மாட்டோம் என்றுதான் தமிழ்நாட்டின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் களத்தில் நிற்கின்றோம். எங்களின் குரல் தமிழ்நாட்டிற்கான குரல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் நலனிற் கானது. நம்முடைய உரிமைக்காக குரல் கொடுக்கிற எம்.பி.க்களாக நாங்கள் எல்லாம் இருக்கும் போது, இந்த தொகுதியின் நலனுக்காக, வளர்ச்சிக்காக குரல் கொடுக்கும் ஒரு மிகச்சிறந்த சட்டமன்ற உறுப்பின ராக எல்.சுந்தரராஜ் செயல்படுவார். பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வீர் உங்களின் உரிமைக்காக, உங்களுடைய நலனுக்காக, நீங்கள் பாதிக்கப்பட்டால் உங்களுக்காக குரல் கொடுக்கிற உங்களின் சகோதரராக எல்.சுந்தரராஜ் செயல்படுவார். எனவே இந்த தொகுதி வாக்காளர்கள் அரி வாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத் திலே வாக்களித்து எல்.சுந்தரராஜை பெருவரியான வாக்கு வித்தியா சத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் தேர்தல் பணிக்குழு தலை வர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், கிழக்கு பகுதி செயலாளர், மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, மேற்கு பகுதிச் செயலாளர் வை.ம.அருள்தாசன், வட்டச் செயலா ளர் கவி கணேசன், சிபிஎம் மூத்த தலை வர் பா.செல்வசிங், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், தொகுதி பொறுப்பாளார் டி.கே.சண்முகம், விசிக மாவட்டச் செயலா ளர் அலெக்சாண்டர், தேமுதிக பகுதிச் செயலாளர் பவுல்ராஜ், காங்கிரஸ் பகுதித் தலைவர் குணசீலன், மதிமுக பகுதிச் செயலாளர் ரகு நாதன், மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட இணைச் செயலாளர் கவுஸ் பாட்சா, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் காதர் மீரான், சிபிஎம் பகுதிச் செயலாளர்கள் எஸ். கதிர்வேல், ஆர்.கதிர்வேல், வட்ட பொறுப்பாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.