மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாநகர பான்பரி
24 Dec 2025, 4:16 pm
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாநகர பான்பரி மார்க்கெட் கிளை உறுப்பினரும், வியாபாரிகள் சங்கத்தின் முன்னாள் பொருளாளருமான டி.தட்சணாமூர்த்தி செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். திருப்பாதிரிப்புலியூர் போலி சட்டி தெருவில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கிரான் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.</p>
