தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சமகால நடப்புகளில் மார்க்சியம்: அவதூறுகளுக்கு எதிரான தத்துவ வெளிச்சம் - எஸ்.பாலா

17 May 2026, 8:54 pm
சமகால நடப்புகளில் மார்க்சியம்: அவதூறுகளுக்கு எதிரான தத்துவ வெளிச்சம் - எஸ்.பாலா

சமகால நடப்புகளில் மார்க்சியம்: அவதூறுகளுக்கு எதிரான தத்துவ வெளிச்சம் - எஸ்.பாலா

சமகாலப் பிரச்சனைகள் மற்றும் பரபரப்பான நிகழ்வு களின் பின்னணியில் இருக்கும் குழப்பங்களை நீக்கி, ஒரு தெளி வான இலக்கை நோக்கிச் செல்ல நமக்குத் தத்துவார்த்த ஒளிவிள க்காகத் திகழ்வது மார்க்சியம். அந்த வகையில், உலக மற்றும் தேசிய அளவிலான சமகால நடப்புகளை மார்க்சியக் கண்ணோட்டத்தோடு அலசி ஆராய்கிறது என். குண சேகரன் எழுதிய ‘சமகால நடப்பு களில் மார்க்சியம்’ என்னும் நூல்.

ஆளுநரின் அவதூறுகளுக்குச் சம்மட்டி அடி

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி மார்க்சி யத்தின் மீது ஏவிய விஷம் தடவிய அவதூறுகளை ஆதாரப்பூர்வமாகத் தகர்க்கும் 8 கட்டுரைகள் நூலின் முதல் பகுதியாக அமைந்துள்ளன. “மார்க்சியம் மடிந்து போன தத்து வம், வன்முறைத் தத்துவம், ஆங்கி லேயருக்கு உதவிய தத்துவம்” என்று ஆளுநர் உதிர்த்த உளறல்களின் உள்நோக்கங்களை ஆசிரியர் இதில் தோலுரித்துக் காட்டுகிறார்.

விடுதலைப் போரின்போது மத அடிப்படையில் நாட்டைப் பிளக்க நினைத்த ஆர்.எஸ்.எஸ் ‘பிரிட்டி ஷாரிடம் மண்டியிட்டுக் கிடந்ததை யும், அதே வேளையில் கம்யூனிஸ்டு கள் ‘பூரண சுதந்திரம்’ என்ற முழக்க த்தோடு மாபெரும் தியாகங்களைச் செய்ததையும் வரலாறு கொண்டு நிறுவுகிறார். தொழிலாளர்களின் போராட்டங்கள் யாரோ தூண்டி விடுவதால் ஏற்படுபவை அல்ல; அவை வர்க்கச் சுரண்டலின் விளை வாகவே வெடிக்கின்றன என்ற உண்மையை நூல் உரக்கச் சொல்கிறது.

ஏஐ (AI) யுகத்தில் மார்க்சியம்

இந்நூலின் மிகச் சிறப்பான மற்றும் சமகாலத்திற்கு அவசிய மான பகுதி – செயற்கை நுண்ணறிவு (AI) காலத்திலும் மார்க்சியத்தின் பொருத்தப்பாட்டை ஆய்வுப்பூர்வ மாக விளக்குவதாகும். மானுட வர லாற்றில் தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன்களை எப்போதுமே உடைமை வர்க்கமே அறுவடை செய்து வந்துள்ளது. அதே போலத்தான் இன்று ஏஐ தொழில்நுட்பமும் உழைக்கும் வர்க்கத்தை மேலும் சுரண்டவே பயன்படுத்தப்படுகிறது என்பதை நூல் சுட்டிக்காட்டுகிறது.

“கண்மூடித்தனமாக செயற்கை நுண்ணறிவு புகுத்தப்படுவதால் மக்களின் வாழ்வில் ஏற்படும் மோசமான தாக்கமும், தவறான தக வல்கள் பரப்பப்படுவதும் கவலை யளிக்கிறது” என்று கூறி ‘செயற்கை நுண்ணறிவின் தந்தை’ ஜியோஃப்ரே ஹிண்டன் தனது 75-வது வயதில் கூகுள் நிறுவனத்திலிருந்து வில கியதை ஆசிரியர் இங்கு பொருத்த மாகச் சான்றுகாட்டுகிறார்.

“தீவிரமாகும் முரண்பாடுகள் சமூகப் புரட்சியின் சகாப்தமாக எழுகிறது” என்ற காரல் மார்க்ஸின் தீர்க்கதரிசன வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில், இந்தத் தொழில்நுட்பக் காலத்திலும் தொழி லாளர் வர்க்க ஒற்றுமையைக் கட்டி யெழுப்ப வேண்டியதன் அவசி யத்தை இந்நூல் வலியுறுத்துகிறது. அறிவியல், வரலாறு, பாலின சமத்துவம் மற்றும் பிற்போக்கு அரசியல் குறித்து விவாதிக்க விரும்பும் அனைவரும் வாசிக்க வேண்டிய தத்துவக் கையேடு இது. சமகால நடப்புகளில் மார்க்சியம் ஆசிரியர்: என். குணசேகரன் வெளியீடு: பாரதி புத்தகாலயம் பக்கங்கள்: 80 | விலை: ₹80 தொடர்புக்கு: 9444567935

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.