தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மார்க்ஸ் சிலை அமைப்புக்குழு முதலமைச்சருக்கு நன்றி!

7 Feb 2026, 2:02 pm
மார்க்ஸ் சிலை அமைப்புக்குழு முதலமைச்சருக்கு நன்றி!
<p><strong>மார்க்ஸ் சிலை அமைப்புக்குழு முதலமைச்சருக்கு நன்றி!</strong></p> <p>சென்னை, பிப். 7 - தமிழ்நாட்டின் தலைநகர் சென் னையில், மாமேதை காரல் மார்க்ஸ் சிலையை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமையன்று திறந்து வைத்தார். &nbsp;இந்நிலையில், தங்களின் கோரிக்கையை ஏற்று, வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் மாமேதை காரல் மார்க்ஸின் சிலையை நிறு வியதற்காக, முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வ தாக, காரல் மார்க்ஸ் சிலை அமைக்கும் குழு கூறியுள்ளது. இதுதொடர்பாக, மார்க்ஸ் சிலை அமைப்பதற்கான குழு வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: 2000-ஆவது ஆண்டில் உருப்பெற்ற கோரிக்கை உழைப்பாளர் தினத்தன்று சென்னையில் உள்ள உழைப்பாளர் சிலைக்கு மாலை அனிவித்து, சிறப்பு செய்யும்போது மாமேதை காரல் மார்க்ஸிற்கு சிலை நிறுவ வேண்டும் என்கிற எண்ணம் உதித்தது. அதன் அடிப்படையில் மார்க்ஸ் சிலை சென்னையில் அரசால் நிறு வப்பட வேண்டும் என்கிற எண்ணத்தில் 2020-இல் மார்க்ஸ் சிலைக்குழு பேராசிரியர் அ. மார்க்ஸை ஒருங்கிணைப்பாள ராகக் கொண்டு உருவாக்கப்பட்டது. &nbsp;மரிய சூசை, பால சுப்பிர மணியன், மனிதி செல்வி, &nbsp;மாரி யப்பன், எஸ். பாஸ்கரன், ரமணி, மனோகரன், செங்கதிர், ஏ.எஸ். குமார், அன்பு தனசேகர், ஸ்ரீதரன், உதயக்குமார், நீலமேகம், எல்.ஐ.சி. ரவிச்சந்திரன், வீர தமிழ் தேசீய தமிழர், ராஜன், செங்கோல், சின்னப்பா தமிழர், அரவிந்த் பாரதி, மணிமாறன், ரகு, தமிழரசு, கதிர், கல்பனா, மறைந்த செவ்வியன், மறைந்த கேன்டீன் மணி, மறைந்த லிங்கன், எம்.எல். சண்முகம் ஆகி யோர் சிலைக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். இந்தக்குழு பல தலைவர்களை அணுகியது. தலைவர்கள் மூலம் &nbsp;தொடர் முயற்சி 2023-இல் விசிக மாநில அலுவல கம் அமைந்துள்ள அம்பேத்கர் திடலில் காரல் மார்க்ஸ் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. சிபிஐ மூத்த தலைவர் ஆர். நல்ல கண்ணு, விசிக தலைவர் தொல். திருமாவளவன், திமுக தொழிற் சங்க தலைவர் சண்முகம், உட லுழைப்பு தொழிலாளர் சங்கத்தின் கீதா, சிபிஐ துணைச் செயலாளர் மு. வீரபாண்டியன், அன்பு தன சேகரன், சிபிஐஎம்எல்- லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத் தம்பி, யுசிபிஐ (எம்.கே.) மாநிலச் செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், மாமேதை காரல் மார்க்ஸ் சிலை யை தமிழக அரசே நிறுவ வேண்டும் என முழங்கினார். &nbsp;அதன் பிறகு சிலைக்குழு, உழைக்கும் மக்கள் மாமன்றம்&zwnj; தலை வர் குசேலர், திமுக மகளிரணி தலைவர் க. கனிமொழி, சிபிஐ மாநி லச் செயலாளர் இரா. முத்தரசன், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு ஜனநாயக முற்போக்கு இயக் கங்கள், கட்சிகளின் தலைவர்க ளைச் சந்தித்து, மார்க்ஸ் சிலை அமைப்பதற்கான கோரிக்கையை அரசிடம் கொண்டு செல்ல கோ ரிக்கை வைத்தது. சட்டமன்றத்தில் பேசிய எம். சின்னத்துரை எம்எல்ஏ தமிழ்நாடு முதல்வரின் செய லாளர்கள் வெ. இறையன்பு, ஜெயசீலன், த. உதய சந்திரன் ஆகி யோரையும் சந்தித்தது. அப்போது, முதல்வர் உரிய நேரத்தில் உரிய இடத்தில் மார்க்ஸ் சிலையை நிறுவுவார் என பதிலளிக்கப்பட்டது. இதன்பிறகு, சிலைக்குழு புதி தாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அவர்களைச் சந்தித்து, மார்க்ஸ் சிலை அமைப்புக் கோரிக்கையை தெரிவித்ததன் அடிப்படையில், சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் மா. சின்னத்துரை, மாமேதை காரல் மார்க்ஸிற்கு சிலை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமன் றத்தில் முன்வைத்தார். சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் நேரடியாகவே முதலமைச்சரைச் சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தார். &nbsp;விளைவாக மாமேதை காரல் மார்க்ஸின் சிலையை சென்னை கன்னிமாரா நூலகத்தின் நுழை வாயிலில் 2026 பிப்ரவரி 6 அன்று &nbsp;தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இதற்காக, தமிழக முதலமைச்ச ருக்கு மார்க்ஸ் சிலைக்குழு நன்றி யினை தெரிவித்துக் கொள்கிறது. &nbsp;இவ்வாறு மார்க்ஸ் சிலை அமைப்புக்குழு கூறியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.