தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்களின் பிரச்சனைகளை திசைதிருப்பும் ஆயுதமே போர் என்ற மார்க்ஸ் கூற்று நிஜமானது!

16 Mar 2026, 4:46 pm
மக்களின் பிரச்சனைகளை திசைதிருப்பும் ஆயுதமே போர் என்ற மார்க்ஸ் கூற்று நிஜமானது!
<p><strong>மக்களின் பிரச்சனைகளை திசைதிருப்பும் ஆயுதமே போர் என்ற மார்க்ஸ் கூற்று நிஜமானது!</strong></p> <p>சென்னை, மார்ச் 16 - மாமேதை காரல் மார்க்சின் 143-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கன்னிமாரா நூலகத்தில் உள்ள அவரது சிலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. &nbsp;அதைத் தொடர்ந்து, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: &ldquo;உலகத் தொழிலாளிகளே ஒன்று சேருங்கள். இழப்பதற்கு எதுவுமில்லை கை விலங்குகளைத் தவிர. அடைவதற்கு பொன்னுலகம் இருக்கிறது&rdquo; என்றார் மார்க்ஸ். இந்தியாவையும் பொன்னுலகமாக மாற்றுவதற்கு சிபிஎம் உறுதியேற்கிறது. உலகத்தை மாற்றுவதற்கான தத்துவத்தை மார்க்ஸ் அளித்தார். அந்த திசையில், இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் வளமாக வாழ்வதற்கான- சமூகத்தை மாற்றுவதற்கான- வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம். இந்தியச் சூழலில், வர்க்கப் போராட்டமானது, வர்க்கச் சுரண்டலோடு, சாதியம் - பாலினப் பாகுபாடு ஆகியவற்றுக்கு எதிரான- ஒட்டுமொத்தமாக சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தையும் உள்ளடக்கியதாக உள்ளது. இந்தப் போராட்டத்தை ஒன்றிணைத்துதான் நடத்த முடியும். உலகம் நெருக்கடியில் உள்ளது. &ldquo;புதியதோர் உலகம் செய்வோம், கெட்டப் போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்&rdquo; என்ற பாவேந்தரின் வரிகள் உயிர்ப்பெற்று வலம் வருகிறது. அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீதும், மேற்கு ஆசியப் பகுதி மீதும் தொடுத்து வரும் அராஜகங்களை கண்டனத்தோடு உலகம் எதிர்கொண்டுள்ளது. முதலாளித்துவம், வளங்களைக் கைப்பற்றவும், புதிய சந்தைகளை உருவாக்கவும் பயன்படுத்துகிற ஒரு ஆயுதம் தான் போர் என்று மார்க்ஸ் வரையறுத்துள்ளார். பிரச்சனைகளிலிருந்து மக்களைத் திசைத்திருப்பும் ஆயுதமாகவும் போர் இருக்கிறது என்றும் மார்க்ஸ் கூறினார். எனவே, வாழ்வுரிமை, ஒடுக்குமுறை, அமைதிக்கான போராட்டத்தை இணைத்து நடத்துவோம். உலகில் எங்கு போர் நடந்தாலும் அதனை எதிர்க்கிற முதல் குரல் கம்யூனிஸ்டுகளின் குரலாகவே இருக்கும் என்று சபதமேற்கிறோம்&rdquo; என்றார். இந்நிகழ்வின்போது மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க. கனகராஜ், எஸ்.கண்ணன், கே. சாமுவேல்ராஜ், ஜி. சுகுமாறன், மாவட்டச் செயலாளர்கள் எம். ராமகிருஷ்ணன் (வடசென்னை), ஜி. செல்வா (மத்திய சென்னை), மாநிலக்குழு உறுப்பினர்கள் பி. சுகந்தி, வே. ராஜசேகரன், தோ. வில்சன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.