முந்தய பக்கம்

தியாகி தில்லையாடி வள்ளியம்மை நினைவு தினம்

22 Feb 2026, 3:26 pm
தியாகி தில்லையாடி வள்ளியம்மை நினைவு தினம்
<p><strong>தியாகி தில்லையாடி வள்ளியம்மை நினைவு தினம்</strong></p> <p>மயிலாடுதுறை, பிப்.22- &nbsp;மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் தியாகி வள்ளியம்மையின் நினைவு தினத்தையொட்டி, நினைவு மண்டபத்தில் உள்ள அம்மையாரின் உருவச் சிலைக்கு, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தியாகத்தின் உருவாய் சுடர்விடும் வீராங்கனை வள்ளியம்மையின் வரலாற்றை உலகறியச் செய்து பெருமை சேர்க்கும் வகையில், தில்லையாடி வள்ளியம்மையை போற்றும் வகையில் தில்லையாடியில் நினைவு மண்டபம் 1971 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. &nbsp; &nbsp; &nbsp; அந்த வகையில் அவரது நினைவு தினத்தில் தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் நினைவு மண்டபத்தில் உள்ள தியாகி வள்ளியம்மை உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். &nbsp;மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், ஒன்றியச் செயலாளர் ஏ. ரவிச்சந்திரன் உள்ளிட்ட தலைவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பூங்கொடி, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, மஞ்சுளா, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரெங்கராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram