வர்க்கப் போரில் செங்கொடியின் தியாகம் இன்று தியாகி ராக்கியண்ணன் நினைவு தினம்
23 Jul 2026, 11:52 pm
<p><strong>வர்க்கப் போரில் செங்கொடியின் தியாகம் இன்று தியாகி ராக்கியண்ணன் நினைவு தினம்</strong></p><p>ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சாதிய மற்றும் வர்க்க சுரண்டல்களுக்கு எதிராகவும் செங்கொடி இயக்கம் தன் வரலாற்று நெடுகிலும் அளப்பரிய தியாகங்களை செய்துள்ளது. சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட் டத்தை, வர்க்கப் போராட்டத்தின் பிரிக்க முடியாத அங்கமாக முன் னெடுத்த கோவை மண்ணில், தனது சொந்த சாதியில் பிறந்தவ ராக இருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக உறுதியோடு போராடினார் என்ற ஒரே காரணத்திற்காக சொந்த சாதியைச் சேர்ந்த ஆதிக்க சாதி களாலேயே கொடூரமாகப் படு கொலை செய்யப்பட்டவர்தான் தியாகி ராக்கியண்ணன். மதுக்கரை சிமெண்ட் தொழிற் சாலை செங்கொடி இயக்க முன் னணி ஊழியராகவும், சீராபாளை யம் கிராம பஞ்சாயத்து உறுப்பின ராகவும் பணியாற்றிய ராக்கி யண்ணன், ஒரு சிறு விவசாயியும் கூட. அப்பகுதியில் 360 ஏக்கர் நிலம் வைத்திருந்த நிலவுடமை யாளர், ஏழை கூலித் தொழிலா ளர்களின் மாட்டுச் சாணத்தைக் கூட காசு கொடுக்காமல் அப கரித்து வந்ததை எதிர்த்து, கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையில் சீராபாளையம் கிராம மக்களைத் திரட்டிப் போராடினார். பணம் தராவிட்டால் சாணம் இல்லை என மக்கள் வீறுகொண்டு எழுந்ததால், ஆத்திரமடைந்த நிலவுடமையாளரின் அடியாட்கள் ஏழைகளின் குடிசைகளுக்குத் தீ வைத்தனர். ராக்கியண்ணனின் இடைவிடாத முயற்சியால் காவல் துறை வழக்குப் பதிவு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறு வாழ்வும், வீடுகளும் பெற்றுத் தரப் பட்டன. தேர்தல் தோல்வி, தீ வைப்பு வழக்கு மற்றும் பஞ்சாயத்து மூலம் மக்களுக்கு குடிநீர் கிணறு அமைத்துக் கொடுத்தது என தன் ஆதிக்கத்திற்கு சவா லாக இருந்த ராக்கியண்ணனை ஆதிக்க சாதியை சேர்ந்த நில வுடமையாளர்கள் கொடூரமாக கொலை செய்து உடலைப் புதைத் தனர். நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் பார்வதி கிருஷ்ணன், தோழர்கள் கே.ரமணி, பி.கே.ராமசாமி ஆகியோரின் முயற்சி யால் அமைக்கப்பட்ட சிறப்புப் படையினரால், ஒரு மாதத்திற்குப் பின் உடல் தோண்டி எடுக்கப் பட்டது. தையல்காரர், சலவைக் காரர், செருப்பு தைத்தவர் எனப் பல சாட்சியங்கள் தெளிவாக இருந்தபோதிலும், விலைக்கு வாங்கப்பட்ட மருத்துவர் அளித்த பொய் அறிக்கையால் (தோண்டி எடுக்கப்பட்டது பெண் ணின் எலும்புக்கூடு என அறிக்கை அளிக்கப்பட்டு) நீதி மன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ராக்கியண்ணனை கொன்று விட்டால் செங்கொடி இயக் கத்தை அழித்துவிடலாம் என்ற ஆதிக்க சக்திகளின் கனவு தூள் தூளானது. 70 ஆண்டுகள் உருண் டோடிய நிலையிலும், சீராபாளையத்தில் அவர் உரு வாக்கிய குடிநீர்க் கிணறு இன் றும் சாட்சியாய் நிற்கிறது. சமீபத் தில் நடைபெற்ற சிஐடியூ 16 ஆவது மாநில மாநாட்டில், அவரது அடுத்த தலைமுறை இளம் வாரிசுகள் திரண்டு வந்து “நாங்கள் செங்கொடியோடு நிற் கிறோம்” என முஷ்டி உயர்த்தி யது அனைவரையும் நெகிழச் செய்தது. தியாகி ராக்கியண்ணன் அவர் களின் நினைவு நாளில், அவரது தியாகத்தைப் போற்றி, வர்க்க அமைப்பை வலுவாகத் திரட்டு வோம்! - ஆர்.வேலுசாமி</p>
