முந்தய பக்கம்

தியாகி பக்கிரிசாமியின் 58 ஆவது நினைவு தின செவ்வணக்க கூட்டம்

16 Nov 2025, 3:30 pm
தியாகி பக்கிரிசாமியின் 58 ஆவது நினைவு தின செவ்வணக்க கூட்டம்
<p>தியாகி பக்கிரிசாமியின் 58 ஆவது நினைவு தின செவ்வணக்க கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம் வடக்கு ஒன்றியம் சார்பில், ஒன்றியச் செயலாளர் வி.வி.ராஜா தலைமையில் நடைபெற்றது. தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வடிவேல் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து கட்சி கொடியினை ஏற்றிவைத்தார். கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி, தியாகி பக்கரிசாமி உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. சுபாஷ்சந்திரபோஸ், எம்.முருகையன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ஏ.ராஜா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram