“மார்த்தாண்டம் காய்கறி சந்தை கடைகள் ஒதுக்கீடு விதிமீறல்” ரத்து செய்யக் கோரி வணிகர் பேரவை மனு
14 Aug 2026, 1:45 am

“மார்த்தாண்டம் காய்கறி சந்தை கடைகள் ஒதுக்கீடு விதிமீறல்” ரத்து செய்யக் கோரி வணிகர் பேரவை மனு

சென்னை, ஆக. 13-கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட மார்த்தாண்டம் புதிய காய்கறி சந்தை கடைகள் ஒதுக்கீட்டில் விதிகளை மீறி நிறைவேற்றப்பட்ட நகர்மன்ற தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாகப் பேரவையின் மாநிலத் தலைவர் எஸ். சவுந்தரராஜன் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள மனு விவரம் வருமாறு:மார்த்தாண்டம் புதிய காய்கறி சந்தை யிலுள்ள சி1 முதல் சி81 வரையிலான கடை

களை வெளிப்படையான பொது ஏல மின்றித் தற்காலிக வியாபாரிகளுக்கு நேரிடையாக ஒதுக்கீடு செய்தல் (தீர்மான எண்கள் 1523, 1524), குறைந்த வாடகை மற்றும் வைப்புத்தொகை நிர்ணயித்தல் (தீர்மானம் 1602) மற்றும் குறிப்பிட்ட நபர்களுக்குக் கடைகளை மாற்றி வழங்கு தல் (தீர்மானம் 1609, 1610) போன்ற நகர்மன்றத்தின் கடந்த அக்டோபர் 2025 தீர்மானங்கள் வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுச் சொத்துகளை வெளிப்படையான ஏலம் விடாமல் ஒருதலைப்பட்சமாக ஒதுக்கீடு செய்வதால் நகராட்சிக்குரிய வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, பல ஆண்டுகளாக வியாபாரம் செய்யும் சிறு மற்றும் குறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகள்: குழித்துறை நகர்மன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய தீர்மானங்களை உடனடி யாக ரத்து செய்ய வேண்டும். மேலும், அரசாணை மற்றும் விதிமுறைகளின்படி, அனைத்துக் கடைகளுக்கும் முறையாக விளம்பரம் செய்து வெளிப்படையான பொது ஏலம் நடத்தி, அனைத்து வணிகர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.