பத்திரப் பதிவு அலுவலகம் முன் போராட்டம்
2 Jun 2026, 8:55 pm
<p><strong>பத்திரப் பதிவு அலுவலகம் முன் போராட்டம்</strong></p><p>குழித்துறை, ஜூன் 2 - கன்னியாகுமரி மாவட் டத்தில் பத்திரப் பதிவு அலுவ லகங்களில் பாகப் பிரிவினை செய்து பத்திரங்கள் பதிப்பதில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக் கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் ஜுன் 1 (திங்கள்) அன்று அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்த மெர்லின் ரெஞ்சித் (40) கடந்த நான்கு மாதங்க ளாக தனது மனைவி சஜிதா சம்மந்தமான 20 செண்டு நிலத்தை சகோதரர்கள் 3 பேர், அவர்களுக்குள் பாகப் பிரிவினை செய்து பத்திரப் பதிவு செய்ய விண் ணப்பித்துள்ளார். தொடர்ந்து நான்கு மாதங்களாக மார்த்தாண்டம் பத்திரப்பதிவு அலுவல கத்தில் பல காரணங்களை கூறி அலைக்கழிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் குடும்பத்தோடு திடீரென மார்த்தாண்டம் சார் பதிவாளர் அலுவலகத்தின் வாயில் படியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இவர்களை கண்டு கொள்ளாத அதிகாரி பூவரசி, தனது வாகனத்தில் ஏறி செல்ல முயன்றார். இதனால் மெர்லின் ரெஞ்சித் அதிகாரியை வழி மறித்து, பல மாதங்களாக அலைக்கழிப்பு செய்து விட்டு எந்த பதிலையும் கூறாமல் வாகனத்தில் ஏறிச் செல்வது நியாயமா என கேட்டு வாக்குவாதம் செய்த தால் பரபரப்பு ஏற்பட்டது.</p>
