அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மார்த்தாண்டம் மார்க்கெட் வியாபாரிகள் குழித்துறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகை
15 Jul 2026, 10:42 pm
<p><strong>அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மார்த்தாண்டம் மார்க்கெட் வியாபாரிகள் குழித்துறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகை</strong></p><p>குழித்துறை, ஜூலை 16- மார்த்தாண்டம் மார்க்கெட் வியாபாரி கள் குழித்துறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். குமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் ரூ. 15 கோடியில் வணிக வளாகம் கட்டப்பட்டு தேர்தலுக்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது.உடனடியாக கடை கள் ஏலம் விடப்பட்டு ஏலத்தில் கடைகளை எடுத்த வியாபாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டது. ஆனால் வியாபாரிகளுக்கு குடி தண்ணீர் வசதி,மின்சார வசதி, தனி தனி மீட்டர் வசதி ஆகியவை செய்து கொடுக்க வில்லை. தனி மீட்டர் வசதி , மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் கடைகளை திறக்க முடியாமல் வியாபாரிகள் அவ திக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலை யில் நகராட்சி அலுவலக அதிகாரிகள் வாடகை கட்டணம் ஏப்ரல் 2026 முதல் செலுத்த வேண்டும் என்று வியாபாரி களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கினர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டி வியாபாரிகள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் மார்த்தாண்டம் நகர வர்த்தக சங்கத் தலைவர் தினகர் தலைமையில் வர்த்த கர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் நக ராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகளை சந்தித்து உடனடியாக குடிநீர் மற்றும் மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் வரை மாதாந்திர வாடகையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். இல்லாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறி வித்தனர். இதை அடுத்து அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் விரைந்து நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த னர். இதை அடுத்து வியாபாரிகள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.</p>
