மார்த்தாண்டத்தில் குற்றச் செயலை கட்டுப்படுத்த 25 கேமிராக்கள் பொருத்த முடிவு
5 Jun 2026, 11:03 pm
<p><strong>மார்த்தாண்டத்தில் குற்றச் செயலை கட்டுப்படுத்த 25 கேமிராக்கள் பொருத்த முடிவு</strong></p><p>குழித்துறை, ஜூன் 5- மார்த்தாண்டத்தில் குற்ற செயலை கட்டுப்படுத்த 25 கேமிராக்கள் பொருத்த போலீசார் வணிகர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் இணைந்து ஆலோசனை கூட்டம் ஜூன் 5 வெள்ளியன்று நடைபெற்றது. </p><p> மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் தலைமை வகித்தார். குமரி மேற்கு மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் அல் அமீன், மார்த்தாண்டம் நகர வர்த்தக சங்க துண தலைவர் தினகர், ரோட்டரி கிளப்பைச் சேர்ந்த தொழிலதிபர் வினோத்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினர். மார்த்தாண்டம் பகுதியில் பாதுகாப்பிற்காகவும், குற்ற செயல்களை எளிதில் கண்டுபிடிப்பதற்காகவும் வியாபார நிறுவனங்களின் முன் பகுதியில் ரோடை பார்த்து 25 கேமிரா பொருத்த வேண்டும். மிக வேகமாக செல்லும் பைக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்பர் பிளேட் இல்லாமல் செல்லும் பைக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சைலன்ஸர் கழட்டி அதிக சத்தத்துடன் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.</p>
