தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போர் மேகங்களுக்கிடையே சாதனை படைத்த டென்னிஸ் வீராங்கனை!

7 Jun 2026, 9:20 pm
போர் மேகங்களுக்கிடையே சாதனை படைத்த டென்னிஸ் வீராங்கனை!

போர் மேகங்களுக்கிடையே சாதனை படைத்த டென்னிஸ் வீராங்கனை!

“சில வாழ்க்கைக் கதைகள் வெறும் விளையாட்டு வெற்றி களாக மட்டுமில்லாமல், ஒரு மக்களின் உயிர்மூச்சாகவே மாறிவிடுகின்றன. உக்ரைனின் இளம் டென்னிஸ் வீராங்க னை மார்டா கோஸ்டிக்கின் கதை அப்படிப்பட்டதொரு கதை”.

தனது நாட்டின் மீது ஏவுகணைகள் மழையாகப் பொழியும் நாளிலும், தனது அம்மாவும் சகோதரியும் பத்திரமாக இருக்கிறார்களா என்று தவிக்கும் நெஞ்சத்தோடும், அவர் ஆடுகளத்தில் நிற்கிறார். ஆனால் அங்கே அவர் வெறுமனே நிற்பதில்லை. வெல்கிறார். ஏவுகணை சத்தத்திற்கிடையில் ரோலண்ட்-கரோஸில் நடந்த பிரெஞ்சு ஓபனில் மார்டாவின் முதல் சுற்றுப் போட்டி நடந்த அதே காலை வேளையில், கீவ் நகரில் தனது பெற் றோரின் வீட்டிற்கு நூறு மீட்டர் அருகில் ஏவுகணைத் தாக்குதல் நடந்தது

. அதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். போட்டியை முடித்துக்கொண்டு வந்த மார்டா,”அந்த தாக்குதல் சில மீட்டர் அருகில் இருந்திருந்தால், இன்று எனக்கு அம்மாவும் சகோதரியும் இருந் திருக்க மாட்டார்கள்” என்று கூறினார்.

இந்த வார்த்தைகளை வாசிக்கும் போது நெஞ்சு பதறுகிறது. ஆனால் இந்த ஆழமான மனவலியையும் தன்னுள் புதைத்துக்கொண்டு, ரஷ்யா வில் பிறந்த எதிராளியான ஒக்சானாவை எளிதாக வீழ்த்தினார் மார்டா.

அனுதின மும் உணரும் ஒரு வீராங்கனையின் மன உறுதி இது. வரலாற்று நாள் 4 முறை பிரெஞ்சு ஓபன் சாம்பிய னான ஸ்வியாடெக்கை எதிர்கொண்ட 4ஆவது சுற்றுப் போட்டியில், மார்டா வின் உண்மையான ஆட்டத்திறன் உலகிற்குத் தெரிந்தது. இதற்கு முன்பு ஒரு முறைகூட ஸ்வியாடெக்கிடம் ஒரு செட்டையும் வென்றதில்லாத மார்டா, அந்நாள் முதல் செட்டை 7-5 என்று சமாளித்தார். அதன்பிறகு ஒரு திருப்பு முனை.

இடைவேளையிலிருந்து திரும்பி வந்த ஸ்வியாடெக், மைதானத்தின் ஓரத்தில் ஒலித்த இசைக்கு நடனமாடத் தொடங்கினார். கூட்டத்தின் ஆரவாரம் அந்த நடனத்திற்கு ஒத்துழைத்தது. ஆனால் போட்டி அவரின் பக்கமில்லை. இரண்டாவது செட்டையும் மிக எளி தில் மார்டா கைப்பற்ற, கடந்த ஏழு ஆண்டுகளில் ஸ்வியாடெக் இந்தத் தொடரில் சந்தித்த மிக மோசமான தோல்வியாகும். இது ஒரு புதிய சகாப்த த்தின் தொடக்கமாக உணரப்பட்டது.

சாதனையின் உச்சம் காலிறுதிப் போட்டி நாளில், ஏவு கணைகளும் ஆளில்லா விமானங் களும் உக்ரைனில் குறைந்தது 22 பேரை கொன்றன. அதில் மூன்று குழந்தை களும் அடங்குவர். அந்த நாளில்தான் மார்டா, தனது வழிகாட்டியும் நாட்டு வீராங்கனையுமான எலினாவை வீழ்த்தி காலிறுதியை கடந்தார்.

டென்னிஸ் விளையாட்டின் கூர்மை யான மன அழுத்தங்கள் வீரர்களை அடிக்கடி சிறுபிள்ளைத்தனமான எதிர் வினைகளுக்கு இழுக்கும். ஆனால் மார்டா, வாழ்க்கையை உண்மையா கவே மாற்றக் கூடிய அச்சம் உள்ளத் தில் இருந்தாலும், போட்டி முழுவதும் சமநிலையோடு இருந்தார். அவரது மனத்திடம் ஆடுகளத்தை மட்டுமல்ல, பார்வையாளர்களையும் கலங்க வைத்தது.

டென்னிஸ் புயல் 2002 ஜூன் 28 அன்று கீவ் நகரில் பிறந்த மார்டாவின் ரத்தத்திலேயே டென்னிஸ் ஊறியிருந்தது என்பது மிகையில்லை. அவரது தாய் தாலினா, 1990-களில் உக்ரைனின் முன்னணி தொழில்முறை டென்னிஸ் வீராங்கனை. தந்தை ஒலெக் கோஸ்டிக், கீவ் நகரில் நடைபெற்ற ஆண்டே கப் ஜூனியர் டென்னிஸ் தொட ரின் தொழில்நுட்ப இயக்குநர்.

மாமா தாரஸ் சோவியத் யூனியன் மற்றும் உக்ரைன் நாடுகளுக்காக விளையா டிய புகழ்பெற்ற வீரர்.

ஐந்து வயதாக இருந்த மார்டா, டென்னிஸ் மட்டை யைக் கையில் எடுத்தது ஒரே ஒரு கார ணத்திற்காக, தனது தாயுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று. ஆனால், 2015இல் புகழ்பெற்ற ஜூனியர் ஆரஞ்சு போல் பட்டத்தை வென்று சர்வதேச கவனத்தை ஈர்த்தார்.

2022 வரை தாயே பயிற்சியாளராக இருந்தார்.

அதற்குப் பிறகு போலந்து நாட்டுப் பயிற்சியாளர் சாண்ட்ரா ஜானீ வ்ஸ்காவின் வழிகாட்டுதலில் புதிய உயரங்களை நோக்கி படர்கிறார். பொற்காலம் 2023இல் ஆஸ்டினில் தனது முதல் ஒற்றையர் பட்டம் வென்ற மார்டா விற்கு, 2026 ஆண்டு ஒரு பொற்கால மாக அமைந்திருக்கிறது. மகளிர் டென்னிஸின் மிக உயரிய தொடர் களில் ஒன்றான மாட்ரிட் ஓபனில் ரஷ்யாவின் மிரா ஆண்ட்ரீவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

அடுத்தடுத்து பிரெஞ்சு ஓபன் காலிறுதி வெற்றி, கிராண்ட்ஸ்லாமின் முதல் அரையிறுதி என்று சாதனைகள் தொடர் கின்றன. தற்போது களிமண் தரை (Clay court) வகையில் 15 போட்டி களில் தொடர்ச்சியாக தோல்வியே சந்திக்கவில்லை. அதே போல அரை யிறுதியில் ரஷ்யா இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவாவிடம் வீழ்ந்தார். ஆனாலும், ஒற்றையர் தரவரிசையில் உலகத் தரம் 13-ஐ எட்டி, உக்ரைனின் நம்பர் 2 வீராங்கனையாக திகழ்கிறார்.

பிரெஞ்சு ஓபன் வரலாற்று வெற்றி பெற்ற பிறகு, உணர்ச்சிவசப்பட்ட மார்டா “என் இதயம் முழுவதும் உக்ரைன் மக்களுக்காகவும், தற் போது போரில் போராடி மடியும் என் நாட்டு மக்களுக்காகவுமே துடிக்கிறது. இந்த வெற்றி அவர்களுக்குச் சமர்ப்ப ணம்.” அந்த வார்த்தைகள் மைதான த்தில் இருந்த ஒட்டுமொத்த கூட்டத்தை யும் நெகிழச் செய்தன.

ஏவுகணைகள் வீடுகளை இடிக்கும்.

ஆடுகளத்தில் மார்டா ஒவ்வொரு பந்தை அடிக்கும் போதும், அது வெறும் பந்தல்ல. அது ஒரு மக்களின் உயிர்வலி, நம்பிக்கை மற்றும் தோற்காத உழைப்பு. போர் மேகங்களுக்கிடையே உக்ரைன் கொடி யை உலக அரங்கில் பறக்கவிட்டுக் கொண்டே இருக்கும் இந்த 23 வயது வீராங்கனை மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துவோம். -சி.ஸ்ரீராமுலு

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.