முந்தய பக்கம்

கடும் சரிவில் இந்திய பங்குச் சந்தைகள்

yesterday
கடும் சரிவில் இந்திய பங்குச் சந்தைகள்

கடும் சரிவில் இந்திய பங்குச் சந்தைகள்

மேற்கு ஆசியாவில் அதி கரித்து வரும் போர் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் ஏற்றம் காரணமாக, திங்கள்கிழமை வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.

தொடர்ந்து இரண்டு நாட்களாக இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டிருந்த நிலை யில், திங்களன்று வர்த்தகத்தின் தொ டக்கத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தையின் பிஎஸ்இ சென்செக்ஸ் 616.15 புள்ளிகள் சரிந்து, 76,946.97 என்ற அளவில் வர்த்தக மானது.

அதே போல தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 190.50 புள்ளிகள் குறைந்து, 24,015 என்ற நிலையை எட்டி யுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலையான பிரெண்ட் கச்சா எண்ணெய் சுமார் 3.96 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய் 79.02 டாலராக அதிகரித்துள் ளது.

இந்த விலை உயர்வு முதலீட்டாளர் கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய சந்தைகளில் சரிவான நிலை நிலவுவதால், இந்தியச் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு சுமார் 7 சதவீதம் சரிந்துள்ளது. ஜப்பான், ஷாங் காய் மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைக ளும் சரிவிலேயே வர்த்தகமாகின்றன.

Share
FacebookXWhatsAppTelegram