மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படத்திற்கு ஐந்தே நாளில் 5 பாடல்களை தந்த இசைஞானி!
3 Jun 2026, 12:38 am
<p><strong>மாரி செல்வராஜின் ‘மஞ்சணத்தி’ படத்திற்கு ஐந்தே நாளில் 5 பாடல்களை தந்த இசைஞானி!</strong></p><p>சென்னை, ஜூன் 2- இயக்குநர் மாரி செல்வராஜ் தனது அடுத்த படமான ‘மஞ்சணத்தி’ திரைப் படத்திற்காக, தனது ஆதர்ச நாயக னான இசைஞானி இளையராஜா வுடன் முதன்முறையாக இணையவுள் ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் பேசிய மாரி செல்வராஜ், தான் இயக்கு நர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்த போது ‘அலை ஓசை’ படத்தில் இடம்பெற்ற ‘போராடடா’ பாடலைத் தொடர்ந்து கேட்டு வந்ததாகவும், அந்தப் பாடலே தனது முந்தைய ஐந்து படங்களின் திரைக்கதைகளை எழுத உதவியதாகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இளையராஜாவை அணுகுவதற்கேற்ப ஒரு திரைக் கதையை உருவாக்கி, சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி அவரைச் சந்தித்தபோது, ஐந்தே நாட்களில் ஐந்து பாடல்களை அவர் அமைத்துக் கொடுத்ததாக மாரி செல்வராஜ் வியப்புடன் தெரிவித்தார். மாரி செல்வராஜின் முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு, இது பெண் கதாபாத்திரத்தை மைய மாகக் கொண்ட திரைப்படமாக உரு வாகவுள்ளது. கிராமத்து பெண்களின் கதைகளை மையமாக வைத்து இப்படம் இயக்கப்படவுள்ளது. தனது முந்தைய கதைகள் கோபத்தில் இருந்தும் அரசியலில் இருந்தும் பிறந் தவை என்றும், ஆனால் முதன்முறை யாக இளையராஜாவின் பாடல்களில் இருந்து உதித்த கதையாக ‘மஞ்சணத்தி’ இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்திரைப்படத் தில் கதகளி, பிரியங்கா மோகன் மற்றும் காயது லோஹர் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க வுள்ளதாகக் கூறப்படுகிறது.</p>
