மோடியைச் சந்தித்த மார்கோ ரூபியோ அமெரிக்க கச்சா எண்ணெய்யை இந்தியாவிடம் விற்கத் திட்டம்?
23 May 2026, 9:29 pm

மோடியைச் சந்தித்த மார்கோ ரூபியோ அமெரிக்க கச்சா எண்ணெய்யை இந்தியாவிடம் விற்கத் திட்டம்?

புதுதில்லி, மே 23 - அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ 4 நாள் அரசு முறைப் பயண மாக இந்தியா வந்துள்ளார். கொல்கத்தா வந்திறங்கிய அவர், அன்னை தெரசா இல்லத்தின் தலைமையிடமான மாதர் ஹவுஸ் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் தலைநகர் தில்லி சென்று, பிர தமர் மோடியுடன் இருநாட்டு உறவு கள் குறித்து கலந் துரையாடியதாக கூறப்படுகிறது.

இந்தப் பயணத்திற்கு முன்னதாக அமெரிக்காவில் இருந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய மார்கோ ரூபியோ, இந்தியாவை ஒரு “சிறந்த கூட்டாளி” என வும் “இந்தியா எவ்வளவு எரிசக்தியை வாங்க விரும்பு கிறதோ, அவ்வளவு எரிசக்தியை விற்க அமெரிக்கா தயாராக உள்ளது” என்றும் தெரிவித்திருந்தார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் நெருக்கடி உரு வாகியுள்ளது. இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இச்சூழலை பயன்படுத்தி தங்கள் நாட்டு எரிபொருட்களை இந்தியாவிடம் அதிக விலைக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் ஈட்ட அமெரிக்கா திட்டமிட்டுள்ள தாக கூறப்படுகிறது.