முந்தய பக்கம்

மாரத்தான் போட்டி: அமைச்சர் தொடக்கி வைப்பு

21 Dec 2025, 3:21 pm
மாரத்தான் போட்டி: அமைச்சர் தொடக்கி வைப்பு
<p><strong>மாரத்தான் போட்டி: அமைச்சர் தொடக்கி வைப்பு</strong></p> <p>அரியலூர், டிச.21- &nbsp;துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே, 6 கிலோ மீட்டர் தூரம் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. &nbsp;போட்டியினை போக்குவரத்துத் துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரி மற்றும் ஆமணக்கந்தோண்டி கிராமத்தில் இருந்து ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு வரை 6 கிலோமீட்டருக்கு இந்த போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னதாக ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், ஜெயங்கொண்டம் ஒன்றிய பொறுப்பாளர் என்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். &nbsp;மேலும் மராத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி ஒருவரை பாராட்டி பரிசு வழங்கினார். ஆண்கள், பொது பிரிவு ஆண்கள் (18 வயதிற்கு கீழ்) மற்றும் பெண்கள் உள்ளிட்ட மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் முதல் 5 நபர்களுக்கு &nbsp;ரூ.1000 முதல் 10 ஆயிரம் வரை பரிசு தொகை வழங்கப்பட்டது. &nbsp;இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர்கள், வீராங்கனைகள் என 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram