தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாலை போட்டதாக கணக்கு மட்டும் காட்டிய மரகதம்குமரவேல் சிபிஎம் வேட்பாளர் பா. சுகந்தி கேள்வி

28 Sept 2026, 12:52 am
சாலை போட்டதாக கணக்கு மட்டும் காட்டிய மரகதம்குமரவேல் சிபிஎம் வேட்பாளர் பா. சுகந்தி கேள்வி

சாலை போட்டதாக கணக்கு மட்டும் காட்டிய மரகதம்குமரவேல் சிபிஎம் வேட்பாளர் பா. சுகந்தி கேள்வி

மதுராந்தகம், செப்.27-சாலையிட்டதாகக் கணக்கு மட்டுமே காட்டப்பட்டு பணிகள் நடக்கவில்லை என்றால், அப்போதைய அதிமுக சட்டமன்றஉறுப்பினர் மரகதம் குமரவேல் ஊழல் செய்தாரா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் பா.சுகந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுராந்தகம் தனித் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் பா. சுகந்தி, ஜமீன்எண்டத்தூர், ஒழவெட்டி, மருவலம், சின்னவெண்மணி, அரியனூர், நெசப்பாக்கம், பெரியவெண்மணி, நாகமலை, வெட்டுகாடு,விராலூர், தேவனூர், வெள்ளாரை, நல்லூர்,இரும்பேடு, வாழைப்பட்டு, சாலூர், வேட்டூர்,குருவன்மேடு, மேல்வசலை, கீழ்வசலை, நீலமங்கலம், நீர்பெயர், தொண்ணாடு, ஒதங்காவெளி ஆகியகிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசுகையில், அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் அமைச்சர் ஆதவ்அர்ஜூனா, மதுராந்தகம் பகுதியில் சாலைகள், குடிநீர் மற்றும் மின் இணைப்புகள் வழங்கப்பட்டதாகக் கணக்குகள் மட்டுமே உள்ளதாகவும், பணிகள் எதுவும்நடக்கவில்லை என்றும் கூறி வருகிறார். அப்படியானால், கடந்த ஐந்தாண்டு காலம் இங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த மரகதம் குமரவேல் தான் ஊழல் செய்தாரா என்பதை அமைச்சர் சொல்லாமல் சொல்கிறாரா என்றுவினா தொடுத்தார்.

மேலும், விடுதலை அடைந்து பல ஆண்டுகளாகியும் கிராமங்களுக்குப் பேருந்து, குடிமனைப் பட்டா, மயானப் பாதை, அரசுக் கல்லூரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத அவலநிலை தொடர்வதாகச் சுட்டிக்காட்டிய அவர், மார்க்சிஸ்ட் கட்சிக்கு வாக்களித்தால் மக்களின் அடிப்படைத் தேவைகளைச் சட்டமன்றத்தில் போராடிப் பெற்றுத் தருவதாக உறுதி அளித்தார்.

இப்பிரச்சாரத்தில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.நம்புராஜன், எஸ். பாலா,திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கோபால்,செங்கல்பட்டு மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் இ. சங்கர், வி. அரிகிருஷ்ணன், மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ். ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ். ரவி, க. ஜெயந்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இரா. சதீஷ், சிபிஐகாஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பி.வி. சீனிவாசன், மாவட்டப் பொருளாளர் கமலநாதன்,மாவட்டக் குழு உறுப்பினர்கள் பூபாலன், பாலன், சிங்காரம், நிர்வாகிகள் கோவிந்தராஜ், தரணி, வெங்கடேசன், சரவணன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.