மனு தாக்கலா? மத்தாப்பு திருவிழாவா? உடுமலையில் அதிமுக அலப்பறைகள்
6 Apr 2026, 5:37 pm
<p><strong>மனு தாக்கலா? மத்தாப்பு திருவிழாவா? உடுமலையில் அதிமுக அலப்பறைகள்</strong></p>
<p>உடுமலையில் அதிமுக வேட்பாளர் உடுமலை ராதா கிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்யப் போன வேகத்தை விட, அவர் வரு கையை முன்னிட்டு வைக்கப் பட்ட பட்டாசுகள் காட்டிய வேகம் தான் ஊரையே பர பரக்க வைத்துவிட்டது. பொதுவாக பட்டாசு வெடித்தால் வானம் தான் வேடிக்கை பார்க்கும். ஆனால் இங்கே, ”நாங்க தர லோக்கல்” என்பது போல, பட்டாசுப் பொறிகள் நேராகப் போய் பேருந்து நிலைய ரவுண்டானாவில் தவம் இருந்து காய்ந்து போயிருந்த புற்கள் மீது விழுந்தன. விளைவு? அடுத்த சில நிமிடங்களில் ரவுண்டானா ‘குட்டி அமேசான் காடு’ போல எரியத் தொடங்கியது. நல்லவேளையாக, அங்கிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் பொதுமக்கள், ”தேர்தல் நெருப்பு அப்புறம் இருக்கட்டும், முதல்ல இந்த நெருப்பை அணைப்போம்” என களத்தில் இறங்கி தீயை அணைத்தனர். வேட்பாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஒரு பக்கம் கோட்டாட்சியர் அலுவலகம் நோக்கிப் போக, பின்னால் வந்த சொகுசு காரோ ஒரு ‘சர்க்கஸ் கூடாரமாக’ மாறி யது. காரின் இரண்டு பக்கங்களிலும் இளைஞர்கள் தொங் கிக்கொண்டு வந்ததைப் பார்த்தால், ”வாழ்க வளமுடன்” என சொல்ல வந்தவர்கள், ”நாங்க இன்னும் உயிரோட தான் இருக்கோம்” என நிரூபிக்கப் போராடுவது போல இருந்தது. இதைப் பார்த்த காவல்துறையினர், ”இதுக்கு ஐபிசி-ல செக்ஷன் இருக்கா இல்ல ஒலிம்பிக்ல ஜிம்னாஸ்டிக்ஸ் செக்ஷன் இருக்கா?” எனத் தெரியாமல் திகைத்துப் போய் நின்றனர். சுமார் இரண்டு மணி நேரமாக உடுமலையே ஸ்தம் பித்துப் போய் நின்றது. ஆம்புலன்ஸ் போகுதோ இல் லையோ, மனு தாக்கல் முக்கியம் என்ற அதிமுகவினரின் செயல் அப்பகுதி மக்களிடையே முகச்சுழிப்பை ஏற்ப டுத்தியது.</p>
