தீக்கதிர் முக்கிய செய்திகள்
3 Dec 2025, 2:59 pm

எஸ்.ஐ.ஆர். பணியை எதிர்த்து மன்சூர் அலிகான் உண்ணாநிலை

சென்னை, டிச. 3- பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பிற மாநிலத்தவர் களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை அளிக்கும் வகையில் எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலை வரும் நடிகருமான மன்சூர் அலிகான் சென்னை எழும்பூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். வேலைக்காக வந்த வேறு மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை கொடுக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

கரூரில் சம்பவம்: ஓய்வுபெற்ற நீதிபதி நேரில் ஆய்வு

கரூர், டிச. 3 - கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் டிசம்பர் 3 அன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஐபிஎஸ் அதிகாரிகளான சோனல் மிஸ்ரா, சுமித் சரண் உள்ளிட்டோர் அடங்கிய இந்த மேற்பார்வைக்குழு செவ்வாய்க்கிழமை (டிச. 2) கரூர் வந்த நிலையில், சிபிஐ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, புதன்கிழமை (டிச.3) கூட்ட நெரிசல் நடந்த வேலுச்சாமிபுரத்தில் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, தவெகவினர் அனுமதி கேட்ட உழவர் சந்தை, லைட் ஹவுஸ் கார்னர், மனோரா கார்னர் உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட்டனர்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ திமுகவில் இணைந்தார்!

சென்னை : கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வும், அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளருமான சின்னசாமி புதன்கிழமை (டிச.3) திமுக-வில் இணைந்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்து, அவர் திமுகவில் இணைந்தார். அப்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.