தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மன்னார்குடி போக்குவரத்து பிரிவு அலுவலகத்தின் முறைகேடு உடனே நிறுத்தப்பட வேண்டும்

8 Jun 2026, 10:05 pm
மன்னார்குடி போக்குவரத்து பிரிவு அலுவலகத்தின் முறைகேடு உடனே நிறுத்தப்பட வேண்டும்

மன்னார்குடி போக்குவரத்து பிரிவு அலுவலகத்தின் முறைகேடு உடனே நிறுத்தப்பட வேண்டும்

மன்னார்குடி, ஜுன் 8 - மன்னார்குடி - கும்பகோணம் மாநில நெடுஞ்சாலையில் நான்கா வது கிலோ மீட்டர் தொலைவில் போக்குவரத்துத் துறையின் பிரிவு அலுவலகம் உள்ளது. இந்த அலு வலகத்திற்குள் அரசு வழங்கிய கார் ஒன்று எப்போதும் நகராமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறது. நீண்டகாலமாக இந்த கார் இப்படியேதான் நிற்கிறது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது குறித்து விசாரித்தபோது அதிர்ச்சி யான பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏழை இளைஞர்களுக்கான அரசுத் திட்டம்

போக்குவரத்து அலுவலகங் களில் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமத்திற்கு (LMV Licence) ‘8’ போடும் தேர்வு எழுதச் செல்பவர் கள், தங்களது சொந்த வாகனத்தை யோ அல்லது டிரைவிங் ஸ்கூல் வாக னத்தையோ கொண்டு வர வேண்டும் என்பது விதியாக இருந்தது. இத னால், சொந்தமாகக் கார் இல்லாத ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள், ஓட்டுநர் தேர்விற்குக்கூட டிரைவிங் ஸ்கூல் களை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனைப் பயன் படுத்தி ஒரு சில டிரைவிங் ஸ்கூல்கள் மற்றும் இடைத்தரகர்கள் வாகனங் களை வாடகைக்குத் தருவதற்கும், உரிமம் பெற்றுத் தருவதற்கும் ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்தன.

இடைத்தரகர்களின் இந்த ஆதிக்கத்தை ஒழிக்கவும், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க இளைஞர்கள் மிகக் குறைந்த செலவில் நேரடியாக ஓட்டுநர் தேர்வு எழுதி உரிமம் பெறவும், தமிழகத்தி லுள்ள 145 மையங்களில் 2023 டிசம்பர் இறுதியில் ஒரு திட்டம் கொண்டு வரப் பட்டது. இதற்காக 145 இலகு ரக மோட்டார் கார்கள் ரூ. 6.25 கோடி செல வில் வாங்கப்பட்டன. இவை அனைத் தும் ‘மேனுவல் கியர்’ கொண்ட அடிப்படை மாடல் கார்கள் ஆகும். இவைகளில் ஒன்றுதான் இப்போது மன்னார்குடி பிரிவு அலுவலகத்தில் ஓராண்டிற்கு மேலாக நின்று கொண்டிருக்கிறது.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை பொதுமக்கள் இணையம் மூலமாக நேரடியாகச் செலுத்திவிடலாம். தனி யாக வேறு எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. சொந்த மாகக் கார் இல்லாதவர்கள் இக்கா ர்களைப் பயன்படுத்துவதற்குப் பய னாளிகள் வெறும் ரூ. 50 மட்டும் கட்ட ணமாகச் செலுத்தினால் போதும். இந்தத் தொகையை ஆன்லைனில் செலுத்திவிட்டு, தேர்வுக் களத்தில் இருக்கும் அரசு காரைப் பயன்படுத்தித் தாராளமாக ‘எட்டு’ (8) போட்டுக்காட்டலாம்.

அரங்கேறும் பகல் கொள்ளை

ஆனால், மன்னார்குடி பிரிவு அலு வலகத்தில் இந்த கார் ஓடாம லேயே, ஓட்டுநர் உரிமம் கோரிய இளைஞர்களால் இவசதி பயன் படுத்திக் கொள்ளப்பட்டதுபோல ரூ. 50 கட்டணம் இணையதளத்தின் மூலமாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட தாகக் காட்டப்பட்டுள்ளது.

இது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.தாயு மானவன் கூறும்போது: “இப்பிரிவு அலுவலகத்தின் மோட்டார் வாகன ஆய்வாளரை ஒரு இளைஞர் அணுகினால், உடனே அவர் தனக்குப் பிரியமான இடைத்தரகரைக் கைக் காட்டு கிறார். அந்த நபர் கூடுதல் கட்டணங் களைச் சுரண்டிவிடுகிறார்.

இதற்கான பகடித்தொகை மோட்டார் வாகன ஆய்வாளருக்குத் தொடர்ந்து கிடைத்து வருகிறது. பழைய விதி யைச் சாக்காக எடுத்துக்கொண்டு இந்த முறைகேடு கனஜோராக நடத்தப் படுகிறது. கிராமப்புற இளைஞர் களுக்காக அமலில் உள்ள இத்திட்டத்தை முறைகேடுகளால் தோல்வியடையச் செய்வது குற்ற மாகும். இந்த மோசடி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சம்பந்தப் பட்ட அலுவலர் மீது விசார ணை நடத்தப்பட வேண்டும். இம்முறைகேடு நிறுத்தப்படாவிட் டால், போராட்டங்கள் நடத்தப்படும்” என்று கூறினார்.

இது ஒரு புறம் இருக்க, தமிழ்நாட்டில் தானியங்கி ஓட்டுநர் தேர்வு மையங்கள் (ADTT) திருச்சி யில் கடந்த 26.2.2026 அன்றும், பின்னர் கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களி லும் துவங்கப்பட்டுள்ளது. மனிதத் தலையீடு இன்றி, முற்றிலும் கணினி, உயர்ரக கேமராக்கள், ஆர்.எஃப்.ஐ.டி சென்சார்கள் மூலம் ஓட்டுநர் உரிமத் தேர்வுகளை நடத்தத் தமிழக அரசு இத்திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இது அடுத்த கட்ட நல்ல திட்டம்தான். ஆனால், இந்த விதிகளிலும் ஓட்டை போடும் கில்லாடிகள் நிச்சயம் இருப்பார்கள். வருங்காலங்களில் மாவட்ட நிர்வாகமும் துறைத் தலைமையும் இவைகளைக் கண்காணிக்க வேண்டும். முதலில், ஓட்டுநர் தேர்வு வாகனங்கள் எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதோ, அதை மன்னார்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் உடனே உண்மையாக அமல்படுத்த வேண்டும். இதையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நீடாமங்கலம் சுப்பையா

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.