தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு போராட்டம்

16 Jul 2026, 9:58 pm
அரசு கலைக் கல்லூரி மாணவர்கள்  வகுப்புகள் புறக்கணிப்பு போராட்டம்
<p><strong>அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு போராட்டம்</strong></p><p>மன்னார்குடி, ஜூலை 16- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரி வளாகத்திற்குள், புதிய அரசு மகளிர் கலைக்கல்லூரி ரூ.18 கோடி மதிப்பில் வரவிருப்பதை அறிந்து மாணவர்கள், ஒட்டு மொத்தமாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் நடைபெற்ற இப்போ ராட்டத்திற்கு ஆர். தர்ஷின் தலைமை ஏற்றார். கல்லூரி வாசல் வளைவில் கூடிய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தி லும் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் ஜே.பி.வீரபாண்டியன் மாவட்டத் தலைவர் கே.ஆர். பாரதசெல்வன், மாவட்டப் பொருளாளர் க.கோபி, மாவட்டக் குழு உறுப்பினர் அஜித் உள்ளிட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, மாணவர் தலைவர் ஆர்.தர்ஷின் கூறும்போது “நகரைச் சுற்றிலும், புறநகர்களிலும் ஏராளமான இடங்கள் இருந்தும், இந்த கல்லூரி விளையாட்டு மைதானத்தில் புதிய கல்லூரி வருவதை எதிர்க்கிறோம். மன்னார்குடியில் மகளிருக்கென்று தனியாக கலைக்கல்லூரி நிச்சயமாக அவசியம்தான். அதே சமயத்தில், எங்கள் கல்லூரி இரு பாலர் படிக்கும் கல்லூரியாக இப்போது உள்ளது. சுமார் 4000 பேரில் கிட்டத்தட்ட 65 விழுக்காடு மாணவிகளாக உள்ளனர். இப்படிப்பட்ட சிறப்புமிக்க கல்லூரியின் அடிப்படை சிறப்பை அரசின் இந்த முடிவு சிதைத்துவிடும் என நாங்கள் கவலை கொள்கிறோம். சதவீதம் புறநகர்களில் புதிய கல்லூரிக்கு இடங்கள் ஏராளமாக உள்ளன அரசும் மாவட்ட நிர்வாகமும் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்’’ என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.