தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘மனதின் குரலில்’ மறைக்கப்பட்ட மக்களின் குரல் - மு. இளங்கோ

28 Oct 2026, 9:13 pm
‘மனதின் குரலில்’ மறைக்கப்பட்ட மக்களின் குரல் - மு. இளங்கோ

‘மனதின் குரலில்’ மறைக்கப்பட்ட மக்களின் குரல்

2014 அக்டோபர் 25 முதல் “மனதின் குரல்” வானொலியில் மக்களோடு பேசி வருகிறார் பிரதமர் மோடி. கடந்த அக்டோபர் 25 அன்று 139ஆவது முறையாகப் பேசினார். பொருளாதாரம், வேலையின்மை, விலைவாசி, வேளாண் பிரச்சனைகள் குறித்துப் பேசுவார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வெளிநாட்டுப் பொருட்களைத் தவிர்த்து, உள்நாட்டுக் கைவினைஞர்களின் பொருட்களை வாங்குங்கள் என்றே பேசினார். உள்நாட்டுப் பொருட்களை ஆதரிப்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், 9 நாடுகளுடன் “வேளாண் வணிக தாராள ஒப்பந்தம்” போட்டு, வேளாண் பொருட்களை வரியின்றி அல்லது குறைந்த வரியில் இறக்குமதி செய்து இந்திய வேளாண் சந்தையைச் சீரழிக்கும் ஏற்பாட்டைப் பற்றி ஏன் பேசவில்லை? இது விவசாயிகளுக்குச் செய்யும் மிகப்பெரும் துரோகம்.

2014க்கு முன் அளித்த வாக்குறுதிகளை ஆட்சியாளர்கள் மறக்கலாம்; நாம் மறக்கவில்லை. கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.5 லட்சம், ஊழலற்ற ஆட்சி, விலைவாசிக் கட்டுப்பாடு, உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்த குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகள் தற்கொலைத் தடுப்பு, ஆண்டுக்கு 2 கோடி வேலை, பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு என்ற இவற்றில் ஒன்றையாவது 139 முறை பேசியும் குறிப்பிடாததன் மர்மம் என்ன?

கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை, உழைப்பவர் மீது தாக்குதல்

12 ஆண்டு பாஜக ஆட்சியில் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு ஆதரவான திட்டங்களும் சட்டங்களுமே நிறைவேறின. 2025-26இல் மட்டும் ரூ.20,485 கோடி, 12 ஆண்டுகளில் ரூ.9.95 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால் ஒரே ஒருமுறை விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யுங்கள் என்ற கோரிக்கை புறக்கணிக்கப்படுகிறது.

நூற்றாண்டுப் போராட்டத்தில் பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்துவது, நிரந்தரத் தொழிலாளர் முறையை ஒழித்து நிர்ணயிக்கப்பட்ட நேரத் தொழிலாளர் முறையைப் புகுத்துவது, வேலைநிறுத்த உரிமையையும் 8 மணி நேர வேலை உரிமையையும் பறிப்பது என ஒன்றிய அரசு செயல்படுகிறது. இதற்கு எதிராகத் தொழிலாளர்கள் 9 பொது வேலைநிறுத்தங்களை நடத்தியுள்ளனர்; தொடர்ந்து போராடத் தயாராகின்றனர். பெட்ரோல்-டீசல் விலை உயர்வும், ஜிஎஸ்டி மூலம் அனைத்துப் பொருட்கள் மீதான வரி உயர்வும் மக்களை விழி பிதுங்க வைக்கின்றன. எரிபொருள், ராணுவத் தளவாடம், விண்வெளி, விமான நிலையம், நெடுஞ்சாலை, ரயில்வே, எல்ஐசி, வங்கி, அஞ்சல் என மக்கள் வரிப்பணத்தில் உருவான பொதுத்துறைகளையும் தனியாருக்குத் தாரைவார்க்கின்றனர். இது நாட்டையே முதலாளிகளிடம் ஒப்படைப்பதாகும்.

அடிபணிய வைத்த போராட்டங்கள்

2020 நவம்பர் 26 அன்று, அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டம் இயற்றக் கோரியும், மின்சாரத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெறக் கோரியும், 500க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் தில்லியில் போராடின. போராட்டக் களத்திலேயே 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்நீத்தனர். கடும் எதிர்ப்பால் 2021 நவம்பர் 19 அன்று மோடி அரசு பணிந்தது. ஆனாலும் விவசாயிகளுக்கு எதிரான முயற்சிகள் தொடர்கின்றன.

நீட் தேர்வு 2016இல் கொண்டுவரப்பட்டது. முறைகேடுகள் நடக்கும் என்ற எச்சரிக்கையையும், பல மாநிலச் சட்டப்பேரவைகளின் விலக்குத் தீர்மானங்களையும் ஒன்றிய அரசு புறக்கணித்தது. 2026 மே 3 நீட் வினாத்தாள் ராஜஸ்தானில் கசிந்ததாகப் புகார் எழுந்ததும், இந்திய மாணவர் சங்கமும் இளைஞர்களும் நாடு முழுவதும் தீயெனப் போராடினர்; இதன் விளைவாகக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக நேர்ந்தது.

வாக்குரிமையும் ஜனநாயகமும்

அரசியல் சாசனப் பிரிவு 326, 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை வழங்குகிறது. ஆனால் எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் 13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களைத் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. அரசுக்கு எதிராக வாக்களிப்பவர்கள் என்று கருதி, சிறுபான்மையினரையும் பழங்குடியினரையும் குறிவைத்த நடவடிக்கை இது. நடுநிலை தவறி பாஜகவின் துணை அமைப்பாகச் செயல்படும் ஆணையம் ஜனநாயகத்தைப் புதைக்குழியில் தள்ளும். எனவே தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனக் கோரி, தில்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களும் இளைஞர்களும் இடதுசாரிகளும் அமைதிப் போராட்டம் நடத்தினர்.

பிரதமர் பதவி விலகக் கோரியிருந்தால்கூட அரசு இவ்வளவு அஞ்சியிருக்காது போலும். பல்லாயிரம் காவலர்களும் துணை ராணுவத்தினரும் போராட வந்தவர்களை வீடுகளிலும் வீதிகளிலும் சிறைப்பிடித்தனர். மெட்ரோ நிலையம் மூடப்பட்டது, ரயில்கள் ரத்து செய்யப்பட்டன, கைபேசி இணையம் துண்டிக்கப்பட்டது, ஜந்தர் மந்தரில் கூடத் தடை விதிக்கப்பட்டது; போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே விமானத்திற்குள்ளேயே கைது செய்யப்பட்டார். இத்தனை அடக்குமுறையையும் எதிர்கொண்டு ஜனநாயகத்தைக் காக்க இளைஞர்கள் களமிறங்கியது, எதிர்காலத் தலைமுறை பாஜகவுக்கு எதிரான போர்க்குணத்துடன் வளர்கிறது என்ற நம்பிக்கையைத் தருகிறது.

மதவெறி அரசியலும் மாநில உரிமையும்

“ஒரே நாடு, ஒரே மதம்” என்ற ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிநிரலை மையமாகக் கொண்டே பாஜக அரசு இயங்குகிறது. மக்களைப் பிளவுபடுத்தி ஆட்சியைத் தக்கவைக்க, இஸ்லாமியச் சிறுபான்மையினர் மீது தொடர் வன்முறையும் மிரட்டலும் ஏவப்படுகின்றன; இது நிரந்தர வகுப்புவாதப் பிளவையும் இந்துத்துவ ஒருங்கிணைப்பையும் உருவாக்கும் முயற்சியே.

அரசியலமைப்பு வழங்கிய வாழ்வுரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, போராடும் உரிமை, வழிபாட்டு உரிமைகளை அழிக்கவும், அரசியலமைப்பையே மாற்றவும் துடிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக அனைத்துப் பகுதி மக்களும் களத்தில் உள்ளனர். இச்சூழலில், மதவெறிக் கொள்கைகளை எதிர்ப்போம், மாநில உரிமைகளை விட்டுத்தர மாட்டோம், மக்கள் விரோதத் திட்டங்களை அமல்படுத்த மாட்டோம், பாஜக அரசிடம் அடிபணிய மாட்டோம், உரிமைகளைக் கேட்டும் போராடியும் பெறுவோம் என்று தவெக அரசின் குரல் ஒலிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.