தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் குத்தகை இடங்களை வனத் துறையிடம் தனியார் நிறுவனம் ஒப்படைத்தது

12 Jul 2026, 11:56 pm
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் குத்தகை இடங்களை வனத் துறையிடம் தனியார் நிறுவனம் ஒப்படைத்தது
<p><strong>மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் குத்தகை இடங்களை வனத் துறையிடம் தனியார் நிறுவனம் ஒப்படைத்தது</strong></p><p>திருநெல்வேலி, ஜூலை 12- நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலையில் பாம்பே பர்மா டிரேடிங் நிறுவனம் சுமார் 8 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான இடத்தை கடந்த 1929-ஆம் ஆண்டு சிங்கம்பட்டி ஜமீன் மூலம் குத்தகைக்கு வாங்கி தேயிலை தொழிலை நடத்தி வந்தது. அந்த பகுதியை பாதுகாக்கப் பட்ட வனப்பகுதியாக அறிவிக்க வேண்டும். அதற்கான நடவடிக் கையை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தனியார் நிறுவனம் தேயிலை தோட்டத்தை மூடிய நிலையில் குத்தகைக்கு எடுத்த இடத்தை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி மொத்தம் இருந்த 8 ஆயிரத்து 373 ஏக்கரில் 8 ஆயிரத்து 152 ஏக்கர் இடம் கடந்த ஆண்டு மே மாதம் வனத்துறையிடம் ஒப்படைக்கப் பட்டது. மீதம் இருந்த 221.44 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு வனத் துறையிடம் சனிக்கிழமை அதிகாரி கள் முறைப்படி ஒப்படைத்தனர். எஞ்சிய இந்த 221.44 ஏக்கர் பரப்பளவில் மாஞ்சோலை, காக் காச்சி,நாலுமுக்கு மற்றும் ஊத்து பகுதிகளில் குடியிருப்புகள், தொ ழிற்சாலை கட்டிடங்கள் மற்றும் இதர கட்டமைப்புகள் இருந்ததால் அப்பகுதி நிறுவனத்தின் வச மிருந்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் ஸ்ரீநாத் எஞ்சிய 221.44 ஏக்கர் நிலத்தை 15 நாட்களுக்குள் தமிழ்நாடு வனத் துறையிடம் ஒப்படைக்குமாறு நிறு வனத்திற்கு அறிவிப்பு வழங்கி யிருந்தார். அதனைத் தொடர்ந்து, அந்த நிலத்தை ஒப்படைக்கும் விதமாக அம்பாசமுத்திரம் துணை இயக்கு நர் முன்னிலையிலும், நோட்டரி பப்ளிக் சாட்சியுடன் நிறுவன சட்ட மேலாளர் மற்றும் வனச்சரக அலு வலர் ஆகியோரால் மெமோ ரெண்டம் கையெழுத்திடப்பட்டு தமிழ்நாடு வனத்துறையிடம் அந்த இடம் முறையாக ஒப்படைக் கப்பட்டது. இதன் மூலம், தேயிலை நிறு வனத்திற்கு குத்தகைக்கு வழங்கப் பட்டிருந்த மொத்தம் உள்ள 8373.57 ஏக்கர் நிலப்பரப்பும் முழுமை யாக தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாடு மற்றும் உடைமையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.