தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேயிலைக் காடுகளின் ரத்தம் தோய்ந்த நூற்றாண்டு வரலாறு

24 May 2026, 10:50 pm
தேயிலைக் காடுகளின்  ரத்தம் தோய்ந்த நூற்றாண்டு வரலாறு

தேயிலைக் காடுகளின் ரத்தம் தோய்ந்த நூற்றாண்டு வரலாறு

“நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் குடிக்கும் ஒவ்வொரு துளி தேநீரிலும் கலந்திருக்கிறது எமது உதிரம்...” என்ற ஆதவன் தீட்சண்யா வின் வரிகளை அடியொற்றி, மாஞ்சோ லை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் களின் ஐந்து தலைமுறை கால ரத்தச் சாட்சியமாக வெளிவந்திருக்கிறது இந்நூல்.

மாஞ்சோலையிலிருந்து மதுரை சட்டக் கல்லூரிக்கு வந்து வழக்கறிஞராக உயர்ந்த இ. இராபர்ட் சந்திரகுமார், தன் மண்ணின் வலிகளை இதில் ஆவணமாகப் பதிவு செய்துள்ளார்.

அடிமைத்தனத்தின் மாயவலை 1929-இல் சிங்கம்பட்டி ஜமீனிடம் 95 ஆண்டுகாலக் குத்தகைக்கு நிலம் பெற்று, மும்பையின் பி.பி.டி.சி (BBTC) நிறுவனம் மாஞ்சோலையில் தேயிலை தோட்டங்களை உருவாக்கியது.

நெல்லையின் கடுமையான வறட்சி, பசி மற்றும் சாதியக் கொடுமைகளிலிருந்து தப்பிக்க நினைத்த எளிய மக்களுக்கு ‘முன்பணம்’ தந்து, ஆசை வார்த்தை கூறித் தரகர்கள் மூலம் இந்த அடர்ந்த காடுகளுக்குள் இழுத்து வந்தனர்.

அட்டைகள், பாம்புகள், காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், கடும் குளிரிலும் உழைத்த மக்களின் கதையை லூர்து அம்மாள் குடும்பத்தின் வழியே வாசிக்கும்போது கண்கள் நனைகின்றன.

இங்கிருந்து தப்பிக்க முயன்றவர்களின் கணுக்கால் நரம்பை அறுப்பது, சிறை வைப்பது என ஆப்பிரிக்க அடிமை முறைக்கு இணை யான கொடூரங்களை இக்கம்பெனி அரங்கேற்றியது.

நிறைவடையும் குத்தகையும் துயரமும் அத்தனை அடக்குமுறைகளையும் கடந்து, ஏ.ஐ.டி.யு.சி (AITUC) உள்ளிட்ட தொழிற்சங்கப் போராட்டங்களின் மூலமே தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளையும், கல்வி மற்றும் போக்குவரத்து வசதிகளையும் வென் றெடுத்தனர்.

இத்தனை நெருக்கடி யிலும் அவர்கள் பகிர்ந்துண்ட வாழ்வும், எஸ்டேட்டில் சினிமா திரையிடும்போது காட்டிய பரவசமும் அழகாகப் பதிவாகி யுள்ளன.

தற்போது குத்தகை முடிந்து, இப்பகுதி காப்புக் காடாக அறிவிக்கப் பட்டு எஸ்டேட் மூடப்படும் தருவாயில் உள்ளது.

நூறாண்டு காலம் கொள்ளை லாபம் சம்பாதித்த கம்பெனி எளிதாக வெளியேறிவிடும்.

ஆனால், ஐந்து தலை முறையாகத் தாங்கள் வாழ்ந்த நிலம், பிள்ளைகள் படித்த பள்ளி, உழைத்துத் தேய்ந்த மண் என அனைத்தையும் பிரிந்து நிற்கும் 2000-க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வு இந்த நூற்றாண்டின் ஆகப் பெரும் துயரமாக, விடை தெரியாக் கேள்விக்குறியாக நிற்கிறது.

உழைப்பை நேசிக்கும் ஒவ்வொரு வரும், கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டல் முகத்தைத் தெரிந்துகொள்ள அவசியம் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான வரலாற்றுப் பதிவு இது.

மாஞ்சோலை 1349/2 எனும் நான் ஆசிரியர்: வழக்கறிஞர் இ. இராபர்ட் சந்திரகுமார் வெளியீடு: விகடன் பிரசுரம் பக்கங்கள்: 368 | விலை: ₹475

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.