தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாழ்வாதாரத்திற்கு மாற்று தொழில் கேட்டு நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மாஞ்சோலை எஸ்டேட் மக்கள்

8 Jun 2026, 9:53 pm
வாழ்வாதாரத்திற்கு மாற்று தொழில் கேட்டு நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில்  குவிந்த மாஞ்சோலை எஸ்டேட் மக்கள்
<p><strong>வாழ்வாதாரத்திற்கு மாற்று தொழில் கேட்டு நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மாஞ்சோலை எஸ்டேட் மக்கள்</strong></p><p>திருநெல்வேலி, ஜூன் 8 - நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி ஆகிய தேயிலை தோட்டப் பகுதிகளில் 5 தலை முறைகளாகச் சுமார் 98 ஆண்டுகள் நூற்று க்கணக்கான கூலித் தொழிலாளர்கள் வாழ்ந்து வந்தனர். ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டதால் மாஞ்சோலை தேயிலை தோட்ட நிர்வாகம் அவர்களுக்கு பணி வழங்காத நிலையில், வனத்துறை அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் இறங்கியது. இந்நிலையில் மறுவாழ்வை உறுதி செய்யக் கோரி, அதாவது தங்க ளுக்கு வாழ்வாதாரத்திற்கு மாற்று தொழிலை ஏற்படுத்தி தரக் கோரி திங்க ளன்று மாஞ்சோலை மலைப் பகுதியில் வசிக்கும் மக்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்தனர். தொழிலாளர்கள் சார்பில் ஸ்டாலின், அமுதா, ஜான்சன், சாந்தகுமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்களுக்கு வழங்கி வந்த பி.பி.டி.சி. நிர்வாகம், 2024 ஜூன் 14 ஆம் தேதியோடு தனது உற்பத்தியை நிறுத்திக் கொண்டது. முறையான அறிவிப்போ, முத்தரப்பு பேச்சுவார்த்தையோ இல்லாமல் விருப்ப ஓய்வுத்தொகை என்ற பெயரில் நபர் ஒரு வருக்கு குறைந்தபட்சம் ரூ.1.30 லட்சம் முதல் ரூ.3.30 லட்சம் வரை மட்டுமே கொடுத்து நிர்வாகம் எங்களை ஏமாற்றி வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கி யது. இதுகுறித்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த 8 மாதங்களாக எங்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்படவில்லை. தேயிலைத் தொழிலை தவிர வேறு தொழில் தெரியாத எங்களின் வாழ்வா தாரத்தைக் காக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேலை வாய்ப்பிழந்த சூழலில், தமிழக அரசு தேயிலை தோட்ட நிறுவனமான ‘டான்டீ’ ஏற்று நடத்தி, இந்த எஸ்டேட் மக்க ளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் அல்லது மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட் குதிகளை சுற்றுலா தலமாக மாற்றி, அங்கேயே மக்களுக்கு மாற்று வாழ்வாதா ரத்தை வழங்க வேண்டும். மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பி.பி.டி.சி. நிர்வாகம் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கித் தொகை ரூ.4,655 கோடியில் ஒரு பகுதியை தொழிலாளர்க ளின் இழப்பீட்டு தொகையாக வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.