தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளராக மணிவாசன் நியமனம்!
11 Apr 2026, 6:18 pm
<p>தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளராக மணிவாசன் ஐ.ஏ.எஸ்-ஐ நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.</p><p>சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி வருகிறது. இன்று தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளராக இருந்த தீரஜ் குமார் மாற்றப்பட்டு, புதிய செயலாளராக மணிவாசனை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவர் இன்று மாலை 5 மணிக்குள் பொறுப்பேற்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.</p><p><br></p>
