திருப்பூர் மாவட்டத்தில் 160 குழுக்கள் கண்காணிக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் நாரணவரே தகவல்
16 Mar 2026, 4:46 pm
<p><strong>திருப்பூர் மாவட்டத்தில் 160 குழுக்கள் கண்காணிக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் நாரணவரே தகவல்</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 16 – திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் 160 குழுக்கள் தேர்தல் தொடர் பான கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் என்று மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அலுவ லர் மனிஷ் நாரணவரே தெரிவித்தார் இது தொடர்பாக திங்களன்று மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே செய்தியாளர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தேர் தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 2,822 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணி மேற்கொள்வதற்காக வாக்குச்சாவடி அலுவலர்களாக மொத்தம் 13 ஆயிரத்து 546 அரசு பணியாளர்கள் நிய மிக்கப்படுவர். 39 ஆயிரம் புது வாக்காளர் திருப்பூர் மாவட்டத்தில், மாற்றுத்திற னாளி வாக்காளர்கள் 11ஆயிரத்து 499 பேர் உள்ளனர். முதல் தலைமுறை வாக்கா ளர்கள் (18-19 வயதுடையோர்) 39 ஆயிரத்து 541 பேர் உள்ளனர். வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மொத்த கட்டுப் பாட்டு கருவி 3 ஆயிரத்து 922, வாக்குப்பதிவு இயந்திரம் 5 ஆயிரத்து 506, வாக்கு சரிபார்ப்பு கருவி 4 ஆயிரத்து 59 இம்மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளது. 160 குழுக்கள் கண்காணிப்பு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந் துள்ளதையடுத்து எட்டு சட்டமன்றத் தொகுதி களுக்கும் 9 பறக்கும் படை, 9 நிலையான கண் காணிப்பு குழு மற்றும் 2 வீடியோ கண்கா ணிப்புக் குழுக்கள் வீதம் இப்பணிகளுக்கு மொத்தம் 160 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள் ளன. மேலும், தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக் கப்பட்டு செயல்பட்டு வருகிறது. “தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பாக பொது மக்கள் 1800-425-0045 என்ற கட்டணமில்லாத தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண் டும் தேர்தல் ஆணையத்தால் வடிவமைக் கப்பட்டுள்ள cVIGIL APP மூலமாகவும் புகார் அளிக்கலாம். வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொடர்பான சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையி லுள்ள 0421-1950 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். பொதுமக்கள் அளித்திடும் புகார்கள் மற் றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர் பான புகார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட பறக்கும் படை மற்றும் நிலையான கண்கா ணிப்பு குழுவிற்கு அனுப்பப்பட்டு 100 நிமிடங் களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். 50 ஆயிரம் ரூபாய் வரை அனுமதி அதேபோல் தேர்தல் நடத்தை விதி அம லுக்கு வந்துள்ள நிலையில், யாரும் தகுந்த ஆவணங்கள் இன்றி ரொக்கமாக ரூ.50 ஆயி ரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்லக் கூடாது. உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டு கருவூலத்தில் செலுத்தப்ப டும். பேஸ்புக், எக்ஸ், வாட்ஸ்ஆப் உள்பட எல்லாவித சமூக ஊடகங்களும் கண்காணிக் கப்படும். உடுமலை மலைவாழ் மக்கள் வாக்களிக் கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். மலைவாழ் மக்கள் மட்டுமின்றி அனைத்துப் பகுதி மக்களும் வாக்களிக்க வேண்டும், வாக்குப்பதிவை அதிகரிக்கவும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலு வலர், ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரிவித் தார்.</p>
