முந்தய பக்கம்

மணிப்பூரில் மீண்டும் வன்முறை பெண் உட்பட 3 பேர் பலி

5 Jun 2026, 9:04 pm
மணிப்பூரில் மீண்டும் வன்முறை பெண் உட்பட 3 பேர் பலி
<p><strong>மணிப்பூரில் மீண்டும் வன்முறை பெண் உட்பட 3 பேர் பலி</strong></p><p>3 ஆண்டுகளை கடந்தும் பாஜக ஆளும் மணிப்பூரில் இன்னும் வன்முறைச் சம்பவங்கள் குறைய வில்லை. வெள்ளியன்று அதிகாலை காங்போக்பி மாவட்டத்தின் சைது-கம்பா சோல் துணைப் பிரிவில் உள்ள லோய் போல் குல்லன் கிராமத்தில் ஆயுதம் ஏந் திய இரண்டு கும்பல் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. பல நிமிடங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச் சூடு மோதலில் பெண் உள்பட 3 பேர் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்று கூறப்படு கிறது. உயிரிழந்தவர்கள் லெட்கோங்கம் ஹாவ்கிப், டின்மேரி ஹாவ்கிப், ஜங்மின் லால் ஹாவ்கிப் என அடையாளம் காணப் பட்டுள்ளனர். மேலும் இந்தத் தாக்குத லில் 7 வீடுகள் தீக்கிரையாகின. குறிப்பாக இந்த வன்முறை சம்பவத்திற்குப் பிறகு குல்லன் கிராம மக்கள் பாதுகாப்பைத் தேடி அருகிலுள்ள வனப்பகுதிகளுக்கு ஓடி தஞ்சம் புகுந்துள்ளனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram