தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மணிப்பூரில் மீண்டும் வன்முறை 2 குழந்தைகள் பலி ; 5 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு

8 Apr 2026, 5:30 am
மணிப்பூரில் மீண்டும் வன்முறை 2 குழந்தைகள் பலி ; 5 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு

மணிப்பூரில் மீண்டும் வன்முறை 2 குழந்தைகள் பலி ; 5 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு

பாஜக ஆட்சி நடைபெறும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வன்முறை (குக்கி - மைதேயி இடையேயான மோதல்) நீடித்து வருகிறது. பாஜக ஆட்சி கவிழ்க்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமையும் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்த பின்னும் கூட அம்மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் கொஞ்சம் கூட குறையவில்லை.

இந்நிலையில், தௌபால் மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களில் மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். வன்முறையைத் தொடர்ந்து 5 மாவட்டங்களில் இணைய சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மொய்ராங் துரோங்போபி கிராமத்தில் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, செவ்வாயன்று காலை உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இரண்டு எண்ணெய் டேங்கர்கள் மற்றும் ஒரு லாரியை தீயிட்டுக் கொளுத்தினர். நிலைமையைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.