தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

13 Nov 2026, 10:32 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

இம்பால்பழங்குடியினப் பெண் படுகொலை மணிப்பூரில் 48 மணிநேர முழுஅடைப்பு

3 ஆண்டுகளுக்கு மேலாக வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தின் காங்போக்பி-சேனாபதி எல்லையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் குக்கி பழங்குடியினப் பெண் உயிரிழந்தார். யார் துப்பாக்கிச் சூடு நடத்தியது என்பது தொடர்பாக இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. காவல்துறை விசாரணை தொடர்பாக எவ்வித செய்திகளும் வெளியாகவில்லை.

இந்நிலையில், பழங்குடியினப் பெண்ணின் படுகொலையை கண்டித்து குக்கி - ஜோ பழங்குடியின அமைப்புகள் மணிப்பூரில் 48 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை

முதல் அமலுக்கு வந்த 48 மணி நேர முழுஅடைப்புப் போராட்டத்தால், குக்கி மற்றும் ஜோ பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் மலை மாவட்டங்களில் சந்தைகள், பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் இயங்கவில்லை. குறிப்பாக காங்போக்பி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்

2025ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டு கேல் ரத்னா விருதுக்கு யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதேநேரத்தில், 17 விளையாட்டு வீரர்களுக்கு ‘அர்ஜுனா’ விருதுகள் வழங்கப்பட்டன. மூத்த இந்திய கால்பந்து வீரர் இசையா அருமைநாயகம் வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் ‘அர்ஜுனா’ விருதைபெற்றுக்கொண்டார். 5 பயிற்சியாளர் களுக்கு துரோணாச்சாரியா விருது வழங்கப்பட்டது. இருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் துரோணாச்சாரியா விருதுகளைப் பெற்றனர். புனேவில் உள்ள ஆர்மி பாராலிம்பிக் நோட் நிறுவனத்துக்கு, ராஷ்டிரிய கேல் ப்ரோத்சாஹன் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. மேலும் 4 நபர்களுக்கு 2024ஆம் ஆண்டுக்கான டென்சிங் நோர்கே தேசிய சாகச விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.