முந்தய பக்கம்

மணிப்பூரில் மீண்டும் பதற்றம் - 5 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம்

7 Apr 2026, 6:17 pm
மணிப்பூரில் மீண்டும் பதற்றம் -  5 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம்

மணிப்பூரின் இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபால், காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் ஆகிய 5 மாவட்டங்களில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் ஒரு வீட்டில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 6 மாத குழந்தையும், 5 வயது சிறுவனும் கொல்லப்பட்டனர். இதில் படுகாயமடைந்த குழந்தைகளின் தாய், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சூழலில், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபால், காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் ஆகிய 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு பிராட்பேண்ட், VSAT-கள் மற்றும் VPN சேவைகள் உள்ளிட்ட இணையம் மற்றும் மொபைல் தரவுச் சேவைகளின் முடக்கப்பட்டுள்ளது.

மே 2023 முதல், மெய்தி மற்றும் குகி-ஜோ இனக் குழுக்களுக்கு இடையே நடைபெற்று வரும் வன்முறையில் 260-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு, ஆயிரக்கணக்கானோர் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram