பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு மணிப்பூரில் மீண்டும் வன்முறை
yesterday

பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு மணிப்பூரில் மீண்டும் வன்முறை

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு 2023ஆம் ஆண்டு மே மாதம் முதல்மெய்டெய் - குக்கி சமூகத்தினருக்கு இடையேயான மோதல் இன்று வரை தொடர்ச்சியான வன்முறையாக நீடித்து வருகிறது.மாநிலம் முழுவதும் இந்த வன்முறையில் சிக்கி 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பலலட்சம் மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்)பணி உள்ளிட்ட சில செயல்பாடுகள் மூலம் வன்முறை குறைந்து மணிப்பூர் இயல்புநிலைக்குத் திரும்பியது போன்று ஒன்றிய, மாநில பாஜகஅரசுகள் கட்டுக்கதைகளைப் பரப்பி வருகின்றன. ஆனால், உண்மையில் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை கொஞ்சம்கூடக் குறையவில்லை.

இந்நிலையில், திங்களன்று அதிகாலை மணிப்பூரின் தமெங்லாங் மற்றும் நோனி மாவட்டங்களில் ஆயுதம் ஏந்திய கும்பல் நடத்திய தாக்குதல்களில் கர்ப்பிணிப் பெண் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். பலியான 4 பேரும்குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்தத் தாக்குதலில்ஒரு குழந்தை காயமடைந்ததாகவும், ஒரு பெண் மாயமாகியுள்ளதாகவும்செய்திகள் வெளியாகியுள்ளன. தாக்குதல்களின் பின்னணியில் நாகா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகக் குக்கி அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக மணிப்பூர் பழங்குடியினத் தலைவர்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கின்சா வுயால்சோங் கூறுகையில், “முதல் தாக்குதல் தமெங்லாங் மாவட்டத்தில் உள்ள தொல்லென் கிராமத்தில் திங்களன்று அதிகாலை 4 மணியளவில்நிகழ்ந்தது. இதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; படுகாயமடைந்த அவரது கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தத்துப்பாக்கிச் சூட்டில் அவர்களின் 6 வயது மகனும் காயமடைந்தான். அடுத்து நோனி மாவட்டத்தில் உள்ள லாங்பி கிராமத்தில் தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். நாகா சமூகத்தைச் சேர்ந்தவர்கள்நடத்திய இந்தத் தாக்குதல் தொடர்பாக ஒன்றிய அரசும், தேசிய மனித உரிமைகள் ஆணையமும் உடனடியாகத்தலையிட வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்தார்.