மணிப்பூரில் பழங்குடியின வாக்குகள் அதிகமாக நீக்கம்
10 Jul 2026, 7:59 pm

மணிப்பூரில் பழங்குடியின வாக்குகள் அதிகமாக நீக்கம்

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) ஜூன் 1 அன்று தொடங்கின. ஒரு மாத திருத்தப் பணிகளுக்குப் பிறகு ஜூலை 5 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, எஸ்ஐஆர் பணி தொடங்கு வதற்கு முன்பு மாநிலத்தில் 20,93,076 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர் பணிக்குப் பிறகு மொத்தம் 1.59 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுள்ளனர். இதனால் வாக்காளர் களின் எண்ணிக்கை 19,34,399 ஆக குறைந்து ள்ளது. இதில் 9,40,466 ஆண் வாக்கா ளர்கள், 9,93,660 பெண் வாக்காளர்கள் மற்றும் 294 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர்.

பழங்குடி வாக்குகள் அதிகளவில் நீக்கம்

குறிப்பாக, இந்த எஸ்ஐஆர் பணி மணிப்பூர் மாநிலத்தின் அரசியல் மற்றும் சமூகச் சூழலில் பெரும் விவாதத்தை ஏற்ப டுத்தியுள்ளது. மாநிலத்தின் 60 சட்ட மன்றத் தொகுதிகளில், பழங்குடியின ருக்காக ஒதுக்கப்பட்ட 19 தொகுதிகளில் மட்டும் வாக்காளர்கள் நீக்கம் வழக்கத் திற்கு மாறாக மிக அதிகமாக இருப்பது வரைவு வாக்காளர் பட்டியல் தரவுகள் மூலம் அம்பலமாகியுள்ளது. அதாவது நீக்கப்பட்ட மொத்த வாக்காளர்களில் 64.2% (1.02 லட்சம் பேர்) இந்த 19 பழங்கு டியினத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். மீதமுள்ள 41 சட்டமன்றத் தொகுதி களில் 35.8% வாக்காளர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். இந்த 19 தொகுதிகளும் பெரும்பா லும் மணிப்பூரின் மலைப்பகுதிகளில் அமைந்துள்ளவை. இப்பகுதிகளில் குக்கி-சோ (Kuki-Zo) மற்றும் நாகா (Naga) சமூகத்தினர் பெரும்பான்மை யாக வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.