மணிப்பூரில் பழங்குடியின தேவாலயத் தலைவர்கள் படுகொலை சிஆர்ஐஐ கடும் கண்டனம்
14 May 2026, 8:46 pm
<p><strong>மணிப்பூரில் பழங்குடியின தேவாலயத் தலைவர்கள் படுகொலை சிஆர்ஐஐ கடும் கண்டனம் </strong></p><p>கடந்த 3 ஆண்டுகளாக வன்முறைக் களமாக காட்சி அளித்து வரும் பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தின் காங்போக்பி மாவட்டத்தில் 3 கிறிஸ்தவத் தலை வர்கள் அடுத்தடுத்து கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இந்த படுகொலை சம்பவத்திற்கு சர்வதேச குடிமக்கள் உரிமைகள் இயக்கம் (சிஆர்ஐஐ - Civil Rights Initiative Internationale) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிஆர்ஐஐ அமைப்பின் தேசியத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே.பாபுராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பழங்குடியின தேவாலயத் தலைவர்க ளான ரெவரெண்ட் வும்தாங் சித்லூ, கைகௌலுன் லூவும், போகௌலன் சித்லூ ஆகிய மூவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட வர்கள் அமைதியை நிலைநாட்டவும், மனிதாபிமானப் பணிகளுக்காகவும் உழைத்த தலைவர்கள் ஆவர். அவர் கள் எந்த தவறான செயல்களிலும் ஈடுபட வில்லை. மணிப்பூரில் நிலவும் வன்முறைச் சூழலில் இத்தகைய தலைவர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது; கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து முறையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.</p>
