தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விண்மீன்களுக்கு நடுவே மணிப்பூரின் ஒரு துளி

20 Jun 2026, 9:03 pm
விண்மீன்களுக்கு நடுவே மணிப்பூரின் ஒரு துளி

விண்மீன்களுக்கு நடுவே மணிப்பூரின் ஒரு துளி

நமது விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களையும், விண் மீன் கூட்டங்களையும் கண்டு பிடிக்கும் போது பொதுவாக அமெரிக் கா, ஐரோப்பா போன்ற வெளிநாட்டு இடங்களின் பெயர்களைத்தான் வைப் பார்கள். ஆனால், முதன்முறையாக விண்வெளியின் ஒரு பிரம்மாண்ட பகுதிக்கு இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஏரியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சாதனையைச் செய்தவர் மணிப்பூரைச் சேர்ந்த விண் வெளி விஞ்ஞானியான ரொனால்டோ லைஷ்ராம் (Ronaldo Laishram). அவ ரும் அவரது சர்வதேச விஞ்ஞானிகள் குழுவும் இணைந்து கண்டுபிடித்த அந்த விண்வெளிப் பகுதிக்கு ‘லோக்டாக் புரோட்டோகிளஸ்டர்’ (Loktak Proto cluster) என்று பெயரிட்டுள்ளனர். புரோட்டோகிளஸ்டர்’ என்பது ஓரு பெரிய விண்மீன் கூட்டம் உருவாவ தற்கு முன்னால் இருக்கும் வடிவம். அதாவது அதன் ‘குழந்தைப் பருவம்’ அல்லது ஆரம்பக்கட்ட வடிவம் என சொல்லலாம்.

கேலக்ஸி (Galaxy) என்பது விண்மீன் திரள். அதாவது நமது சூரிய னைப் போல கோடிக்கணக்கான நட்சத் திரங்கள், கிரகங்கள் மற்றும் தூசிகள் ஒன்றாகச் சேர்ந்த ஒரு பிரம்மாண்ட குடும்பம்தான் கேலக்ஸி. நாம் வாழும் பூமி ‘பால்வெளி’ (Milky Way) என் னும் கேலக்ஸியில் உள்ளது. அதே போல கிளஸ்டர் (Cluster) என்பது விண் மீன்களின் கூட்டம் ஆகும். இது பல கேலக்ஸிகள் ஒன்றாக இணைந்து வாழும் ஒரு பெரிய கேலக்ஸி நகரம் போன்றது. ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (JWST) மற்றும் சுபாரு தொலைநோக்கி (Subaru Tele scope) ஆகியவற்றைப் பயன்படுத்தி, சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன் றை வழிநடத்திய லைஷ்ராம், ‘லோக் டாக் புரோட்டோகிளஸ்டர்’ (Loktak Protocluster) என்ற பிரம்மாண்ட விண் மீன் திரள்களின் (Galaxies) கூட்ட மைப்பை ஆய்வு செய்தார். இந்த விண் மீன் திரள்கள், பேரண்டம் தோன்றி வெறும் 1.2 பில்லியன் ஆண்டுகளே ஆகியிருந்தபோது இருந்தவையாகும்.

ஒரு விண்மீன் திரளின் பரிணாம வளர்ச்சியை, அது அமைந்திருக்கும் சூழல் பிரபஞ்ச வரலாற்றின் ஆரம் பக்கட்டத்திலேயே பாதிக்கத் தொடங் கிவிட்டது என்பதற்கான ஆதாரத்தை இந்த ஆய்வுகள் வழங்குகின்றன.

புகழ்பெற்ற நன்னீர் ஏரியான லோக்டாக் ஏரியின் (Loktak Lake) பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த புரோட்டோகிளஸ்டர். பேரண்டத் தின் மிகப்பெரிய கட்டமைப்புகள் அதன் ஆரம்ப காலத்தில் எவ்வாறு வடிவம் பெற்றன என்பதைப் பற்றிய அரிய பார் வையை வானியலாளர்களுக்கு வழங் குகிறது. இதன் ஒளி பூமியை வந்தடைய சுமார் 12.6 பில்லியன் ஆண்டுகள் ஆகி யுள்ளதால், வானியலாளர்கள் இந்த அமைப்பை பேரண்டத்தின் தற்போ தைய வயதில் பத்தில் ஒரு பங்கிற் கும் குறைவாக இருந்தபோது எப்படி இருந்ததோ, அப்படியே காண்கிறார் கள். (அதாவது விண்வெளியில் ஒளி கடந்து வர பல காலம் ஆவதால் நாம் பார்ப்பது எல்லாமே கடந்த காலக் காட்சி தான். அதாவது நாம் நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்தை பார்கி றோம்).

நெருக்கடி மிகுந்த அண்டப்பகுதியில் விண்மீன் திரள்கள்

பேரண்டத்தின் மிகப்பெரிய கட்டமைப்புகளில் விண்மீன் திரள் கூட்டங்களும் (Galaxy clusters) அடங் கும். அவற்றின் ஆரம்பக் கட்டங்கள் ‘புரோட்டோகிளஸ்டர்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை பின்னர் இன்று நாம் காணும் ராட்சத விண்மீன் கூட்டங்களாக வளரக்கூடிய விண்மீன் திரள்களாக உள்ளது.

சுபாரு தொலைநோக்கியின் ‘ஹைப்பர் சப்ரைம்-காமிரா’ (Hyper Suprime-Cam) கருவியைப் பயன் படுத்தி, லைஷ்ராமும் அவரது குழுவி னரும் சுமார் 1.2 பில்லியன் ஆண்டு கள் பழமையான ஒரு பிரம்மாண்ட புரோட்டோகிளஸ்டரைக் கண்டறிந் தனர்.

ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி மூலம் மேற்கொள்ளப் பட்ட அடுத்தகட்ட ஆய்வுகள், அந்த விண்மீன் திரள்களை முன்னெப் போதும் இல்லாத துல்லியத்துடன் ஆராய இக்குழுவிற்கு உதவியது. இந்த கண்டுபிடிப்புகள் தி அஸ்ட் ரோபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸ் (The Astrophysical Journal Letters) இதழில் வெளியிடப்பட்டது.

ஒரு விண்மீன் திரளின் சுற்றுப் புறச் சூழல், அதன் பரிணாம வளர்ச் சியை எப்போது வடிவமைக்கத் தொடங் கியது? என்ற வானியல் துறையின் முக்கியமான கேள்விக்கு இந்த கண்டுபிடிப்புகள் விடை தருகின்றன.

தற்போதைய பேரண்டத்தில், அடர்த்தியான சூழலில் அமைந்துள்ள விண்மீன் திரள்கள், தனித்தனி பகுதி களில் உள்ளவற்றை விட வித்தியாச மாக உருவாகின்றன என்பதை வானி யல் அறிஞர்கள் ஏற்கெனவே அறிவார் கள். அதாவது பெரிய விண்மீன் திரள் கூட்டங்கள், விண்மீன்கள் எவ்வளவு வேகமாக உருவாகின்றன, அவை எப் படி வளர்கின்றன மற்றும் அவற்றின் ஒட்டுமொத்த வடிவத்தைக் கூட பாதிக் கலாம் என அறிந்துள்ளார்கள். ஆனால், இந்த சுற்றுச்சூழல் தாக் கங்கள் எப்போது தொடங்கின என்பது இதுவரை தெளிவாகத் தெரியாமல் இருந்தது. ஒரு புரோட்டோகிளஸ்டரில் உள்ள விண்மீன் திரள்களை கூர்ந்து கவனித்தால், பேரண்டம் ஒப்பீட்ட ளவில் இளமையாக இருந்த அதன் வரலாற்றின் ஆரம்பக் கட்டத்திலேயே இந்த போக்குகளை ஆராய்வதற்கான அரிய வாய்ப்பை வழங்குகிறது. “இந்த ஆரம்பக் கட்டத்தில்கூட சுற்றுப்புறச் சூழல் முக்கியப் பங்கு வகித்துள்ளது என்பதை எங்கள் கண்டு பிடிப்புகள் காட்டுகின்றன” என்கிறார் லைஷ்ராம். “புரோட்டோகிளஸ்டருக் குள் இருக்கும் விண்மீன் திரள்கள், குறைவான அடர்த்தி கொண்ட பகுதி களில் உள்ள ஒத்த விண்மீன் திரள்களை விட சுமார் 1.4 மடங்கு பெரியதாக இருந்தன. இது சுற்றுச்சூழல் தாக் கத்தின் காலவரிசையை முன்பு உறுதிப் படுத்தப்பட்டதை விட இன்னும் பின் னோக்கித் தள்ளுகிறது. மேலும், விண் மீன் திரள் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியின் ஆரம்பக் கட்டங்களை விஞ்ஞானிகள் நன்கு புரிந்து கொள்ள இது உதவும் எனவும் சொல்லப்பட் டுள்ளது.

” புரோட்டோகிளஸ்டருக்கு உள்ளே யும் வெளியேயும் உள்ள விண்மீன் திரள் களுக்கு இடையிலான ஒப்பீடுகள் ஒரு வியத்தகு வேறுபாட்டை வெளிப் படுத்தின. அடர்த்தியான புரோட்டோகி ளஸ்டருக்குள் உள்ள விண்மீன் திரள் கள், மற்ற இடங்களில் உள்ள ஒத்த விண்மீன் திரள்களை விட ஏற்கனவே பெரிய, விரிவடைந்த விண்மீன் கட்ட மைப்புகளை உருவாக்கியிருந்தன என்பதை கூர்ந்து கவனிக்கும் போது தெரிய வந்துள்ளது. இது அவற்றின் சுற்றுப்புற சூழல் அவை எவ்வாறு வளர்ந்தன என்பதையும் பாதித்துள்ளது என்பதையும் உணர்த்துகிறது. பிரபஞ்ச வரலாற்றின் ஆரம்பக் கட்டத்திலேயே சுற்றுச்சூழல் விளைவு கள் விண்மீன் திரள்களின் வளர்ச் சியைப் பாதித்துக் கொண்டிருந்தன என் பதை இந்த கண்டுபிடிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.

ஏன் லோக்டாக்?

லைஷ்ராமுக்கு இந்தக் கண்டுபி டிப்பு ஒரு தனிப்பட்ட முக்கியத்து வத்தையும் கொண்டுள்ளது. “இந்தக் கண்டுபிடிப்புக்கு எனது சொந்த மாநில மான மணிப்பூருடன் ஒரு தொடர்பை ஏற்படுத்த விரும்பினேன்,” என்று அவர் கூறுகிறார்.

எதிர்கால நோக்கம்

உடனடி கண்டுபிடிப்புகளுக்கு அப் பால், லோக்டாக் புரோட்டோகிளஸ்டரா னது விண்மீன் பரிணாம வளர்ச்சி குறித்த எதிர்கால ஆய்வுகளுக்கு ஒரு முக்கிய மான அளவுகோலாக (Benchmark) மாறக்கூடும். லைஷ்ராமைப் பொறுத்தவரை “இளைஞர்களிடம் வானியல் ஆராய்ச் சியில் ஆர்வத்தை வளர்க்க நாங்கள் ஊக்குவித்து வருகிறோம்,” என்று அவர் கூறுகிறார். நமது இந்திய விஞ்ஞானி செய்த இந்தச் சாதனை விண்வெளி ஆராய்ச்சி யில் ஒரு மைல்கல். எதிர்காலத்தில் இது போன்ற ஆராய்ச்சிகளைத் தமிழ்நாட்டி லும், மணிப்பூரிலும் உள்ள பள்ளி மாண வர்கள் செய்ய வேண்டும் என்பதே விஞ் ஞானிகளின் ஆசை. இதற்காக கிராமப் புறங்களிலும் கோளரங்கங்கள் (Planet ariums) மற்றும் அறிவியல் மையங்கள் அதிகம் வர வேண்டும் என்று விஞ் ஞானி ரொனால்டோ கேட்டுக்கொண் டுள்ளார். நன்றி : தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.